"செருப்பால அடிப்பேன்னு சொன்ன சுஹாசினி? ராதிகாவும் அப்படிதான்... யாருடா நீங்க? வெளுத்து வாங்கிய கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவரது இறுதி அஞ்சலியில் நடந்த சில சம்பவங்கள் இன்னும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பாக்யராஜின் உடலை சுற்றி நின்று சிலர் வீடியோ எடுத்தது, மைக் நீட்டி கேள்வி கேட்டது, குடும்பத்தினரின் துயரத்தைக் கூட பொருட்படுத்தாமல் நடந்துகொண்டது போன்ற விஷயங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

அந்த நாளில் நடிகை சுஹாசினி, "இப்படி வீடியோ எடுக்கிறவங்களை செருப்பால அடிப்பேன்" என்று ஆவேசமாக பேசியதும், நடிகை ராதிகா செய்தியாளர்களை கையெடுத்து கும்பிட்டு, "இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீங்க" என்று கோபமாக சொன்னதும் பெரிய விவாதமாக மாறியது.

ஒரு தரப்பு, "அப்படி பேசக்கூடாது" என்றது. இன்னொரு தரப்பு, "அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் ரியாக்ட் பண்ணுவார்கள்" என்று சுஹாசினி, ராதிகாவுக்கு ஆதரவாக நின்றது.

Kasturi Suhasini Radhika K Bhagyaraj

நடிகை கஸ்தூரி பேட்டி

இப்போது இதே விஷயம் பற்றி நடிகை கஸ்தூரியும் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். "சுஹாசினி சொன்னதுல எனக்கு எந்தத் தப்பும் தெரியல. ராதிகாவும் செய்தது தவறுன்னு சொல்ல முடியாது. அந்த நேரத்தில் அங்கே என்ன சூழ்நிலை இருந்தது என்பதை பார்த்தால்தான் புரியும். குடும்பத்தினர் உயிரே போன வேதனையில் இருக்கிறார்கள். அந்த நேரத்திலும் சிலர் கேமரா, மைக், மொபைல் எடுத்துக்கிட்டு யார் எப்படி அழுறாங்கன்னு படம் பிடிக்கிறாங்க. இதைப் பார்த்தா யாருக்குத்தான் கோபம் வராது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு, இது ஒரு நாள் பிரச்சனை இல்லை என்றும் கஸ்தூரி சொல்கிறார். "சிவக்குமார் சார் ஒரு ரசிகரின் போனை தட்டிவிட்ட சம்பவத்தை எல்லாரும் பெரிய விஷயமாக பேசினாங்க. ஆனால் இப்போ தான் புரிகிறது. அவர்கள் உண்மையான ரசிகர்களா? இல்ல விளம்பரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களா? அனுமதி இல்லாமல் ஒருத்தர முகத்துக்குள்ள போன் வைக்கிறாங்க. அடுத்தவங்களை தொந்தரவு பண்ணி அதுல சந்தோஷம் பார்க்கிறாங்க. இப்படிப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்ளணும்னே எங்களுக்கே தெரியல" என்று அவர் கூறியிருக்கிறார்.

வதந்தி

அதோடு, தனக்கே நடந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார். "சில மாதங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை நாளில் என் சொந்த அண்ணனுடன் நான் போட்டோ எடுத்திருந்தேன். அதை பார்த்த சில டிவி சேனல்களும் யூடியூப் சேனல்களும், 'இந்த நபர் யார்?', 'கஸ்தூரியுடன் இருக்கும் மர்ம நபர் யார்?'ன்னு தலைப்பு போட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

கடைசியாக பாக்யராஜ் முகத்தை கூட பார்க்க முடியல.. அவருக்கா இப்படி ஒரு மரணம் வரணும்? கதறி அழுத கலா மாஸ்டர்
அதை பார்த்து எனக்கே சிரிப்பா இருந்தது. என் சொந்த அண்ணனையே தெரியாம இப்படி பேசுறாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க கூட முயற்சி பண்ணாம, அவர்களாகவே ஒரு கதையை உருவாக்கிக்கிறாங்க. இதையெல்லாம் பார்த்தா, 'என்னடா உங்களுக்கு பிரச்சனை... ஏன் இப்படி பண்றீங்க?'ன்னு கேட்கணும் போல இருக்கு" என்று கஸ்தூரி வேதனையுடன் பேசியிருக்கிறார்.

பாக்யராஜின் இறுதி அஞ்சலி

பாக்யராஜின் இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவங்களை நினைவுகூரும் ரசிகர்களும், "அன்று அங்கே நடந்த குழப்பத்தை பார்த்த பிறகுதான் சுஹாசினியும், ராதிகாவும் ஏன் அவ்வளவு கோபப்பட்டார்கள் என்று இப்போது புரிகிறது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் வந்த பிறகு, ஒரு பிரபலத்தின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களின் துக்கமும் கூட சிலருக்கு 'கண்டென்ட்' ஆக மாறிவிட்டது என்ற விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. அந்த விவாதத்துக்கே இப்போது கஸ்தூரியின் இந்த பேச்சு இன்னும் தீனி போட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+