மக்களுக்காக உயிரையே தியாகம் செய்தவரை அவமானப்படுத்திவிட்டீர்கள்.. மோடி மீது பிரியங்கா பாய்ச்சல்!
மக்களுக்காக உயிரையே தியாகம் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோடி அவமானப்படுத்திவிட்டார், அவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: மக்களுக்காக உயிரையே தியாகம் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோடி அவமானப்படுத்திவிட்டார், அவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார் என்று பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி செய்யும் பிரச்சாரம் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மதம் குறித்தும், சாதி குறித்தும், ராணுவம் குறித்தும் பிரதமர் மோடி பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று உத்தர பிரதேசத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி சொன்னது என்ன
உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்தில் பேசிய மோடி, என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. ராஜீவை மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

பிரியங்கா காந்தி
இந்த நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி செய்துள்ள டிவிட்டில், பிரதமர் மோடி இறந்து போனவர்களை வைத்து வாக்கு கேட்கிறார். இறந்த போனவர்களை அவமானப்படுத்தி அதை வைத்து வாக்கு கேட்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். நேற்று அவர் ஒரு ஒழுக்கமான மனிதரின் தியாகத்தையும், மரணத்தையும் அசிங்கப்படுத்திவிட்டார்.

அமேதி மக்கள்
அமேதியில் இருக்கும் மக்களுக்காக ராஜீவ் காந்தி தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். அவர்கள் மோடியின் இந்த கருத்துக்கு மிக சரியான பதிலடி கொடுப்பார்கள். ஆமாம் மோடி ஜி, இந்த நாடு வஞ்சகமான மனிதர்களை ஒருபோதும் மன்னிக்காது, என்று மிக மிக கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மோசமான அரசியல்
பிரதமர் மோடியின் இந்த பேச்சு அரசியல் உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நாட்டில் எந்த பிரதமரும் இப்படி பேசியது கிடையாது. மோடி மிக மிக தரக்குறைவாக விமர்சிக்க தொடங்கிவிட்டார். இது அரசியல் நாகரீகம் கிடையாது., என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications