எப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. வைரலாகும் பிரியங்கா காந்தியின் நெகிழ்ச்சி டிவீட்
ராஜீவ் காந்தி குறித்து பிரியங்கா ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: "அப்பாதான் எப்போதும் என் ஹீரோ" என்று பிரியங்கா காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது தந்தை ராஜீவ் காந்தியுடன் சிறுவயதில் எடுத்து கொண்ட ஒரு போட்டோவையும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா!
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் பிரியங்கா காந்தி. ஆனால் எப்போதெல்லாம் பிரதமர் மோடி ராஜீவ்காந்தியை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும், அதற்கு உடனடியாக வந்து கண்டனத்தை பதிவிடுபவர் பிரியங்காதான்!
"ராஜீவ் காந்தி ஊழல்வாதியாக இறந்தார்" என்று என் தந்தையின் தியாகத்தை அவமதித்த பிரதமர் மோடிக்கு அமேதி மக்கள் இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்று ஒருமுறை சொன்னார்.

ஜிஎஸ்டி
அதேபோல, "நேரு என்னை வேலை செய்ய விடவில்லை, இந்திரா காந்தி என்னை வேலை செய்ய விடவில்லை. அவர் என் ஹோம் ஒர்க் புத்தகத்தை திருடிவிட்டார். நேரு என் பேனாவை திருடிவிட்டார் என்று காரணம் சொல்லும் மோடிக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் ஜிஎஸ்டி குறித்து, டிமானிடைசேஷன் குறித்து பேச முடியுமா?" என்று காட்டமாக கூறினார்.

அவதூறுகள்
இதுபோல பலமுறை ராஜீவ் குறித்த எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு கண்டனங்களை தெரிவிப்பவர் பிரியங்கா காந்தி! இன்று ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காலையிலேயே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி யமுனை நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீர் பூமி என்ற நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

புகைப்படம்
இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் தனது தந்தை ராஜீவ் காந்தியை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டிருக்கிறார் பிரியங்கா.
|
அப்பா-ஹீரோ
ஹரிவன்ஷ் ராய் பச்சனின் புகழ்பெற்ற கவிதை வரிகளை பதிவிட்டுள்ளதுடன், "அப்பாதான் எனக்கு எப்பவுமே ஹீரோ" என்று கேப்ஷன் போட்டுள்ளார். பழைய போட்டோவாக இருந்தாலும், பிரியங்காவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications