லோக்சபாவில் பட்டாசாய் வெடித்த பிரியங்கா காந்தி.. அடுக்கடுக்கான விமர்சனத்தால் ஸ்டன் ஆன எம்பிக்கள்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் பொதுச்செயளலார் பிரியங்கா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினராக தனது முதல் உரையை ஆற்றியுள்ளார். அதில், பாஜக மீதான விமர்சனங்களை கூர்மையாக அடுக்கியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் சமீப காலமாக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த கோரிக்கை எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றியையும் பெற்று தந்திருக்கிறது. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையின்போது அவர் கையில் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய பிரதியை வைத்திருந்தார். பொதுக்கூட்டங்களில் பேசும்போது அதை மேலே உயர்த்தி காட்டி, அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து லோக்சபா தேர்தல் பரப்புரையிலும் இதே பாணியை பின்பற்றியிருந்தார். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பெரும்பான்மை பலத்தை கொண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் என்றும் விமர்சித்திருந்தார். இந்த பிரச்சாரம் காங்கிரசுக்கு நல்ல பலனை கொடுத்தது.
ஆனால் மறுபுறும் எமெர்ஜென்சியை கொண்டுவந்து நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ்தான். நாங்கள் இல்லை, எனவே அவர்களின் குற்றச்சாட்டுகளை நம்பாதீர்கள் என்று பாஜக பதிலடி கொடுத்து வந்தது. இன்று மக்களவையில் விவாதத்திலும் பாஜக சார்பில் எமெர்ஜென்சியை மேற்கோள் காட்டி காங்கிரஸை கடுமையாக தாக்கி ராஜ்நாத் சிங் பேசியிருந்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதில் கடந்த காலங்களில் ஏராளமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடைபெற்று வருகிறது.
மக்களவையில் விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். இன்றும் நாளையும் விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி தனது முதல் உரையை இன்று ஆற்றியுள்ளார்.
உன்னாவ் தொடங்கி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை எதிர்க்கட்சிகள் மீது பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதாவது, "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இது குறித்து கண்டுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. மறுபுறம் நாட்டின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. தனியார் மயம் காரணமாக வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதுவே லோக்சபா தேர்தல் நடைபெறாமல் இருந்தால் இந்நேரம் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றியிருப்பார்கள். ஆனால் மக்கள் இந்த தேர்தலில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications