ஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு!
டின்னருக்கு கணவனை அழைத்து பிரியங்கா காந்தி பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது
டெல்லி: "இந்திரா காந்தி கட்டியதும் சேலைதான்.. சேலைதான்" என்று நம்ம வைரமுத்து எழுதி இருக்கும்போது, சேலை சேலஞ்சிங்கில் பிரியங்கா காந்தி விட்டுவிடுவாரா என்ன.. நாங்களும் சேலஞ்சிங்கில் குதிப்போம்லே என்று களமிறங்கிய பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.. ஆனால் இந்த வாழ்த்தையே சாக்காக வைத்து கணவர் ராபர்ட்டுக்கு பிரியங்கா போட்ட பிட்டுதான் சூப்பர்!
ட்விட்டரில் வழக்கமாக ஏதாவது ஒன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். அதன்படி இன்றைய தேதிக்கு சாரி டுவிட்டர்" என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது.
இதில் நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் டிசைன் டிசைனாக சேலைகளை அணிந்த போட்டோக்களை போட்டனர். குறிப்பாக, சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பாஜகவை சேர்ந்த நிபுர்ஷர்மா, காங்கிரசை சேர்ந்த நக்மா ஆகியோர் ட்வீட்டரில் சேலை அணிந்த போட்டோக்களை பதிவிட்டனர்.

கல்யாண போட்டோ
இதை பார்த்ததும், பிரியங்காவும் 22 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கல்யாணத்தின்போது அணிந்து இருந்த ஆரஞ்சு கலர் பனாரஸ் பட்டு புடவை அணிந்த போட்டோவை பதிவிட்டார். அத்துடன், "திருமண நாள் அன்று காலை நடத்தப்பட்ட பூஜையின்போது எடுக்கப்பட்ட படம்" என்று ஒரு கேப்ஷனை போட்டிருந்தார்.
|
வாழ்த்துக்கள்
பிரியங்கா இந்த போட்டோவை போட்டதும், ஒருசில நிமிடங்களிலேயே வைரலாக தொடங்கிவிட்டது. ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் பிரியங்கா ஜி, உங்களின் செயல்பாடுகளிலும் இந்த கருணையும் அழகும் பிரதிபலிக்கிறது.. திருமண நாள் வாழ்த்துக்கள்.. என்றெல்லாம் ட்விட்டர்வாசிகள் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

கல்யாண நாள்
அதாவது, நிறைய பேர் பிரியங்காவுக்கு இன்றைக்குதான் கல்யாண நாள் என்று நினைத்து கொண்டு இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன பிரியங்கா, "வாழ்த்துக்களுக்கு நன்றி, ஆனால் எனது கல்யாண நாள் பிப்ரவரியில் வருகிறது" என்று பதில் அளித்துள்ளார்.
|
டின்னர்
பதிலை நெட்டிசன்களுக்கு தெரிவித்த பிரியங்கா, விஷயத்தை இதோடு விடவில்லை. கல்யாண நாள் என்று நினைத்து இன்று வந்த வாழ்த்துக்களை பார்த்ததும், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "இன்னைக்கு நைட் டின்னருக்கு என்னை கூட்டிட்டு போங்க" என்று கணவன் ராபர்ட் வதேராவை ட்வீட் போட்டு ட்ரீட் கேட்டுள்ளார். அதுக்கும் இப்ப லைக் குவியுது. குஷ்பு கூட லைக் செய்துள்ளார்.

க்யூட்
கணவனுடன் ஜாலியாக வெளியில் செல்ல, ஏதாவது சாக்கு கிடைக்காதா என்று பல பெண்கள் நினைப்பது இயல்பே.. அதற்கு இந்திராவின் பேத்தி மட்டும் விதிவிலக்கா என்ன? அழைத்த விதத்திலும் பிரியங்கா கியூட்தான்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications