டெல்லி துக்ளக் சாலை போலீஸ் ஸ்டேஷனில் பிரியங்கா காந்தி! அதிரவைத்த ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் டெல்லி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
तुगलक रोड थाने पहुंची कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi #IndiaWithRahulGandhi pic.twitter.com/wwKwfuw7gL
— Delhi Congress (@INCDelhi) June 13, 2022
முன்னதாக அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்தார் ராகுல் காந்தி. இப்பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர். இதனால் டெல்லியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
तुगलक रोड थाने में कांग्रेस के वरिष्ठ नेता#IndiaWithRahul pic.twitter.com/6p398e1MYU
— Delhi Congress (@INCDelhi) June 13, 2022
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய இந்த பேரணியால் அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இத்தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி துக்ளக் சாலை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு காவல்நிலையத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற தேசபக்தி பாடலை காங்கிரஸார் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். டெல்லி துக்ளக் சாலை காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர்களை, பிரியங்கா காந்தீ நேரில் சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், டெல்லியை முற்றுகையிட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கட்சித் தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என்றார். டெல்லியில் காங்கிரஸ் போராட்டத்தில் மிகப் பெரும் பதற்றம் நிலவியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications