இந்தியாவில் இப்போதுள்ள இஸ்லாமிய மக்கள் தொகை எவ்வளவு? லோக்சபாவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்
டெல்லி: இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 19.75 கோடியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் தொடர்ந்து வரும் இனவாத வன்முறை சம்பவத்தில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய் மணிப்பூரில் வாழும் பஸ்மண்டா முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக - பொருளாதார நிலைமை குறித்தும், 2023 மே 30 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகை பற்றிய தரவு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 17.22 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 14.2 சதவீதமாகும்.
"2020 ஜூலையில் தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் தொழில்நுட்ப குழு வெளியிட்ட மக்கள் தொகை மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 138.82 கோடியாக இருக்கும். அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்த அதே விகிதமான 14.2 சதவீதத்தை வைத்து கணக்கிட்டால், 2023 ஆம் ஆண்டில் நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகை 19.75 கோடியாக இருக்கும்," என்று ஸ்மிருதி இரானி தெரிவித்து இருக்கிறார்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் 2021 - 22 காலகட்டத்தில், 7 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் படிப்பறிவு விகிதம் 77.7 சதவீதமாகவும், அனைத்து வயதினரை எடுத்துக்கொண்டால் பணிபுரியும் விகிதம் 35.1 சதவீதமாகவும் உள்ளது.
அதேபோல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020-21ல் நடத்திய ஆய்வில் முஸ்லீம்களில் 94.9 சதவீதம் பேர் மேம்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பெற்று உள்ளனர். மேலும் 97.2 சதவீதம் பேருக்கு மேம்பட்ட கழிப்பறை வசதி உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு புதிய வீடு அல்லது அபார்ட்மெண்ட் வாங்கிய அல்லது கட்டிய முஸ்லீம் குடும்பங்களின் சதவீதம் 50.2 சதவீதம் என்று அவர் கூறினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications