டெல்லி ஜேஎன்யூ போராட்டம்.. ஆம்புலன்ஸை மறைந்தனரா மாணவர்கள்? நிர்வாகம் பகீர் புகார்!
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் மாணவர்கள் மற்றும் பல்கலை நிர்வாகம் இடையே நடக்கும் சண்டை தற்போது பூதாகரமாகி உள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் இன்று விடுதி மாணவர்களுக்கு புதிய விதிகளை பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. புதிய கடுமையான விதிகள் சில விதிக்கும் பொருட்டு இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் குறித்து அங்குள்ள மாணவ சங்கத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதை அடுத்து விடுதி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த கூட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்தனர். கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற மாணவர்கள், அந்த அறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதியில் மாணவர்களுக்கு புதிய கடுமையான விதிகள் விதிக்கப்படுகிறது.
வெளியே செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தண்ணீர், மின்சாரத்தை விடுதியில் தனியாரிடம் அளிக்க முடிவு செய்துள்ளனர். உணவிற்கு தனியார் ஒப்பந்தம் அளிக்க உள்ளனர். ஆதனால் இதற்கு எதிராக போராடுகிறோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போராட்டத்தின் போது, பல்கலை டீன் உமேஷ் கதம் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஹை பிபி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது . ஆனால் போராட்டம் செய்த மாணவர்கள் இந்த ஆம்புலன்ஸை அனுமதிக்கவில்லை என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் மாணவர்கள் தரப்பு மொத்தமாக இதை மறுத்து இருக்கிறது. நாங்கள் எந்த ஆம்புலன்ஸையும் மறைக்கவில்லை. எங்கள் போராட்டம் அமைதியான முறையில் மட்டுமே நடந்தது என்று கூறியுள்ளனர். அதே சமயம் இந்த மாணவர்கள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications