டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி!

Google Oneindia Tamil News

டெல்லி: மிதமானது முதல் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க "அவசரகால பயன்பாட்டிற்காக" சொரியாசிஸ் தோல் நோயை குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் ( Itolizumab)என்ற மருந்தை பயன்படுத்த இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Recommended Video

    Corona Medicine : 'அவசரகால பயன்பாட்டிற்காக' Itolizumab மருந்து | Oneindia Tamil

    "இது ஏற்கனவே பல ஆண்டுகளாக சொரியாசிசுக்கு சிகிச்சையளிக்க பயோகான் அங்கீகரித்த மருந்து" என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி கூறினார்.

    மருந்தை பயன்படுத்தும் முன்பாக, நோயாளியிடமிருந்து எழுத்துப் பூர்வமாக அவர்கள் சம்மதம் பெறப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு

    மருந்து மீது நம்பிக்கை

    மருந்து மீது நம்பிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல மாநிலங்களிலும் லாக்டவுன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அல்லது மருந்துகளிலிருந்து மட்டுமே மக்களுக்கு இப்போது நம்பிக்கை உள்ளது. லாக்டவுனால் கொரோனாவை தடுக்க முடியவில்லை.

    தீவிர நோயாளிகளுக்கு

    தீவிர நோயாளிகளுக்கு

    இந்த நிலையில்தான், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கோவிட் -19 நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும், இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று டி.சி.ஜி.ஐ தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

    பரிசோதனை வெற்றி

    பரிசோதனை வெற்றி

    இந்தியாவில் கொரோனோவைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், எய்ம்ஸ் போன்றவற்றின் மருந்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிடைத்தது.

    பயோகான் தயாரிப்பு

    பயோகான் தயாரிப்பு

    பயோகான் உருவாக்கிய ஐ.ஜி.ஜி 1 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளில், இடோலிஸுமாப் ஒன்றாகும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சோதனை அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களிலும் இடோலிசுமாப் பயன்படுத்தப்படுகிறது.

    3 மருந்துகள் ரெடி

    3 மருந்துகள் ரெடி

    கொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன அல்லது பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில், 5 மருந்துகளில், ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே டி.ஜி.சி.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இரண்டு மருந்துகள் இறுதி சோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிக அதிக ஒற்றை நாள் கொரோனோ வைரஸ் அதிகரிப்புடன் உள்ளது இந்தியா.

    English summary
    Psoriasis Injection Cleared For Limited Use To Treat COVID Patients in India, says Drug Controller
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X