டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி: ஆட்சியைப் பிடிக்கிறார் என். ரங்கசாமி.. 16 டூ 20 இடம் கிடைக்கும்.. ரிபப்ளிக்எக்சிட் போல்

Google Oneindia Tamil News

டெல்லி : புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் ஆகியன இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களை இன்று வெளியிட்டன.

 Puducherry Exit Polls 2021: Republic-CNX Poll Projects NDAs Victory

இதில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 13 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாஜக.,விற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில், இந்த முறை ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்

என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக, அதிமுக ஆகியன இடம்பெற்றுள்ளன. அதிக தொகுதிகளில் என்ஆர்காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Puducherry Exit Polls 2021: Republic-CNX Poll Projects NDA's Victory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X