டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேள்விக்கு எஸ்கேப்பான மோடி... டிவிட்டரில் டிரென்டாகும் புதுச்சேரி கோ வணக்கம் #PuducherrykoVanakkam

Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்விக்கு எஸ்கேப்பான மோடி, டிவிட்டரில் டிரென்டாகும்-வீடியோ

    டெல்லி: புதுச்சேரியில் வீடியோ கான்பிரன்சிங்கில் மோடியிடம் கேள்வி கேட்டவருக்கு புதுச்சேரி கோ வணக்கம் என மோடி அளித்த பதில் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.

    5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடைந்தது. இதனால் இனி நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பாஜக வியூகம் வகுத்துள்ளது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியில் தோன்றி தமிழக பாஜகவினருடன் ஆலோசனை நடத்தும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

    நடுத்தர வர்க்கம்

    நடுத்தர வர்க்கம்

    இந்த நிகழ்ச்சி வருங்காலங்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் புதுவையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதுவையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி நிர்மல் குமார் ஜெயின் என்பவர் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சுமை ஏன் என்றும் கடன் வாங்குவதற்கான நடைமுறைகள் கடினமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்று கேட்டார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதற்கு மோடியோ சிறிது நேரம் ஏதோ இந்தியில் பேசிவிட்டு நிர்மலின் கேள்விக்கு பதிலளிக்காமல் புதுச்சேரி கோ வணக்கம் என கூறி நைஸாக நிகழ்ச்சியை முடித்தார். அதிலிருந்து புதுச்சேரி கோ வணக்கம் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. நியாயமான கேள்விக்கு பிரதமர் பதிலளிக்காதது அவமானகரமானது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

    கேள்விகள்

    கேள்விகள்

    இந்நிலையில் ஏற்கெனவே பட்ட அவமானம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தற்போது காணொலி காட்சி நிகழ்ச்சிக்கு பிரதமருடன் உரையாடும் நபர்களையும் கேள்விகளையும் ஒன்றுக்கு இரு முறை சோதனை செய்தே அனுமதிக்கின்றனர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    அதாவது கேள்விகளை முன்கூட்டியே நமோ ஆப் மூலம் அனுப்புமாறு கூறிவிட்டு அதில் சிறந்த மற்றும் சர்ச்சை எழாத கேள்விகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன. அந்த நபர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் மோடிக்கு தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    English summary
    Puducherry Ko Vanakkam is trending in Tamil twitter as the PM Narendra Modi gives that as reply for a functionary questioned about loans processing difficult for middle class.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X