இன்று தான் கடைசி நாள்.. வங்கி கணக்கு சிக்கலாகும்.. கேஒய்சி விவரங்கள் அப்டேட்.. மிஸ் பண்ணிடாதீங்க
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய கேஒய்சி விவரங்களை மார்ச் 19ம் தேதியான இன்றைக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
கேஒய்சி என்றால் என்ன-: "கேஒய்சி என்பது வங்கி கணக்கு சார்ந்த வார்த்தையாகும். "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்" என்பதன் சுருக்கமே கேஒய்சி (know your customer) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் வரையறைகளே இந்த கேஒய்சி ஆகும்.

ஒரு வங்கி கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்த வங்கிக் கணக்கின் நாமினி யார்? இந்த வங்கி கணக்கிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? வங்கி கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் செய்யும் வங்கி நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன? போன்றவற்றை அறிய இந்த கேஒய்சி (KYC) வழிகாட்டுகிறது. மேலும் வாடிக்கையாளர் மூலம் பிற்காலத்தில் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை வங்கி திறமையாக கையாள இந்த கேஒய்சி பெரிய அளவில் உதவுகிறது.
அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விவரங்களை மார்ச் 19, 2024க்குள் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் தங்கள் கணக்குகளை சுமுகமாக இயக்க முடியும். இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, டிசம்பர் 31, 2023 வரை KYC புதுப்பிப்புக்கான கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மார்ச் 19, 2024க்குள் அதைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த கேஒய்சியின் முக்கிய நோக்கமே ஹவாலா எனும் மணி லாண்டரிங் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பிற பண பரிவர்த்தனைகளை ஒழிப்பதாகும். அதாவது சட்டத்திற்கு புறம்பான பணத்தை ஒழிப்பதாகும்.
வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும். வங்கி கணக்கை தொடங்க தேவையான கேஒய்சி-யாக முகவரி சான்று, அடையாள சான்று மற்றும் புகைப்படம் கேட்கப்படுகிறது.அடையாள சான்றிற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில் முன்பு வங்கி கணக்கு தொடங்கியவர்கள் கேஒய்சி விவரங்களை சரியாக செய்திருக்க மாட்டார்கள்... இதனால் வாடிக்கையாளர் பற்றி வங்கிக்கும் சரி அரசுக்கும் சரி, சரியான தகவல்கள் இருக்காது. ஹவாலா எனும் மணி லாண்டரிங் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பிற பண பரிவர்த்தனைகளை ஒழிக்க கேஒய்சி அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஒய்சி விவரங்களை மார்ச் 19ம் தேதியான இன்றைக்குள் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக இந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் கேஒய்சி (KYC) தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை தங்கள் கணக்குகளின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 19 கடைசித் தேதி ஆகும். கேஒய்சி அப்டேட் தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு தற்போது கடைசி வாய்ப்பு வந்துள்ளது. இந்த வேலையை முடிக்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.
கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைக்குச் சென்று அவர்களின் ஆதார் அட்டை, முகவரிச் சான்று, புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று, மொபைல் நம்பர் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது PNB ஆப் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ தங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மார்ச் 19ஆம் தேதியான இன்றைக்குள் உங்கள் கணக்கின் KYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு சிக்கலுக்கு உள்ளாகலாம்.
PNB கேஓய்சி நிலையை எப்படி சரிபார்க்கலாம்
படி 1: உங்களுடைய PNB இண்டர்நெட் பேங்கிங்கில் லாக் இன்செய்யுங்கள்
படி 2: personal settingக்குள் போய் KYC நிலையைச் சரிபார்க்கவும்
உங்கள் KYC ஐ நீங்கள் புதுப்பிக்க வேண்டுமானால் அது காண்பிக்கும். அதன்பிறகு ஆன்லைனிலேயே நீங்கள் அப்டேட் செய்யலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications