'புஷ்பா 2' ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் மிரட்டல்- கொந்தளித்த கொடவா பழங்குடிகள்-அமித்ஷா பஞ்சாயத்து!
டெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க மறுத்ததாக கூறி புஷ்பா 2 திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என்று ராஷ்மிகாவின் உறவினர்கள் மற்றும் கொடவா பழங்குடியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், அந்த விழாவில் கன்னட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்காதது குறித்து விமர்சித்திருந்தார். இதனால் கன்னட நடிகர், நடிகைகளுக்கு டிகே சிவகுமார் மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா, அடுத்த பஞ்சாயத்தை கூட்டினார். பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ராஷ்மிகா மந்தனாவை அழைத்த போது, கர்நாடகா எங்கே இருக்கிறது என கேட்டார் என புதிய சர்ச்சையை ரவிக்குமார் கவுடா கிளப்பினார்.
மேலும் கன்னட சினிமாவில் அறிமுகமாகி, கர்நாடகா எம்.எல்.ஏ. பல முறை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்த ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் ரவிக்குமார் கவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதேபோல கன்னட அமைப்பினரும் ராஷ்மிகாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
தற்போது இந்த விவகாரம் இனப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ராஷ்மிகா மந்தனா, கொடவா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக கொடவா இன மக்கள் களமிறங்கி உள்ளனர்.
கொடவா சமூகம் அதிகமாக காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் வசிப்பவர்களஆகும். காவிரித் தாயின் மகளாகிய ராஷ்மிகாவை இழிவுபடுத்தாமல், அவருக்கு உரிய பாதுகாப்பை கர்நாடகா மாநில அரசு வழங்க வேண்டும் என்று கொடவா பழங்குடிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் ராஷ்மிகா விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications