Modi Putin: அமெரிக்கா கண்ணை உறுத்துமே! தனது காரில் ஏறாமல் புதின் செய்த செயல்! சீனாவில் செய்ததை இங்கேயும் பண்ணிட்டாரே
டெல்லி: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், வழக்கமாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தனது காரையே பயன்படுத்துவார். ஆனால் இந்தியா வந்துள்ள அவர் பார்ச்சுனர் காரில் மோடியுடன் அமர்ந்து பயணம் செய்தார். ரஷ்யாவுடன் வர்த்த உறவில் இந்தியா நெருக்கமாக இருப்பது அமெரிக்காவுக்கு எரிச்சலை கொடுக்கும் நிலையில் மோடியுடன் புதின் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால், புதினின் இந்த இந்திய சுற்றுப்பயணத்தை உலகமே உற்று நோக்கியது.

இந்தியாவில் ரஷ்ய அதிபர் புதின்
அதுமட்டும் இன்றி ரஷ்யாவுடன் வர்த்த உறவில் இந்தியா நெருக்கமாக இருப்பது அமெரிக்காவுக்கு எரிச்சலை கொடுத்தது. இதனால், ரஷ்யாவுடனான வர்த்தக உறவை துண்டிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாக இருந்தது. ஆனால், இந்த விவகார்த்தில் இந்தியாவின் நலனே முக்கியம் என இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த சூழலில், தான் இன்று புதின் இந்தியா வந்துள்ளார்.
பார்ச்சுனர் காரில் புதின்
இந்தியா வருகை தந்த புதினை டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேரில் சென்று மோடி வரவேற்றார். அப்போது மோடி புதினை அணைத்து வரவேற்றார். ரஷ்ய அதிபர் தனது வெளிநாட்டு பயணத்தின் போது தனது தனிப்பட்ட காரையே பயன்படுத்துவார். ஆனால், டெல்லியில் இந்த வழக்கத்தை மாற்றி மோடியுடன் பார்ச்சுனர் காரில் புதின் பயணம் செய்தார்.
பிரதமர் மோடி, இன்று புதினுக்கு இரவு உணவு விருந்து வைக்கிறார். டெல்லியின் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள இல்லத்தில் இந்த விருந்தளிக்கப்படுகிறது. இதற்காக இரு தலைவர்களும் ஒரே காரில் மோடியின் இல்லத்திற்கு சென்றனர்.
ஒரே காரில் மோடி புதின் பயணம்
மோடி மற்றும் புதின் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தது இந்திய ரஷ்ய உறவை மேலும் வலுவாக்கும் விதமாகவும், இரு நாடுகளின் நட்புறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது உச்சிமாநாட்டின்போது, சீனாவின் தியான்ஜின் நகரில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலுக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஆரஸ்' செடான் காரில் மோடியும் புதினும் சென்றதே முதல் முறையாகும்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். இது குறித்து கூறிய புதின், "பிரதமர் மோடியுடன் காரில் பயணிப்பது என்னுடைய யோசனைதான். அது எங்கள் நட்பின் சின்னம்" என்று இந்தியா டுடே நாளிதழுக்கு கூறினார்.
100 பில்லியன் டாலராக
ரஷ்ய அதிபர் இந்தியா வருவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்தும் லட்சிய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இரு நாட்டுத் தலைவர்களும் எண்ணெய் விநியோகம், அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்துப் பேசுகின்றனர். எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எஸ்யு-57 ரக போர் ஜெட்களை வாங்குவது தொடர்பான விவாதங்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள விளாடிமிர் புதின் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். நாளை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து, ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திப்பார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications