‘பிஎம் கேர்ஸ்’ உள்பட 3 நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை.. பிரதமர் அலுவலகம்
டெல்லி: 'பிஎம் கேர்ஸ்' நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என பிரதமர் அலுவலகம் மக்களவை செயலகத்திற்கு அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது, பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1948ம் ஆண்டு முதல் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தேசிய பாதுகாப்பு நிதியும் இயங்கி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கொரோனா போன்ற அவசர கால சூழல்களை எதிர்கொள்ள 'பிஎம் கேர்ஸ்' எனும் பெயரில் பொது அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. பின்னாளில் இந்த நிதி தொற்றுநோய் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சுகாதார உள்கட்டமைப்பு, பேரிடர் நிவாரணம், பிற அவசரகால உதவிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த நிதி பயன்பாடு குறித்து வெளிப்படைத்தன்மை, தணிக்கை முறை இல்லாததால் கேள்விகள் எழுந்தன.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. 1948 இல் உருவாக்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்பது பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டதாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் தற்போது இயற்கை பேரழிவுகள், விபத்துகள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதி உதவியை வழங்குவதாக மாறியது. பிஎம் கேர்ஸ் நிதியைப் போலவே, இது அரசாங்க பட்ஜெட் ஒதுக்கீடுகளை விட தன்னார்வ நன்கொடைகள் மூலமாகவும் நிதியளிக்கப்படுகிறது.
அதேபோல் தேசிய பாதுகாப்பு நிதி துணை ராணுவப் படைகள் உட்பட ஆயுதப்படைகளின் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த நிதி பிரதமர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இதில் 'பிஎம் கேர்ஸ்' நிதியானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் இயற்றப்பட்ட ஒன்றோ இல்லை.. எனவே இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் இதுதொடர்பாக சிஏஜி தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப அனுமதி இல்லை என்று பிரதமர் அலுவலகம் சார்பில் மக்களவை செயலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், மக்களவை விதிமுறைகளின் கீழ் பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகிய மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகள் மற்றும் விவகாரங்களை அனுமதிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பூஜ்ஜிய நேரம் அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது இந்த நிதிகள் குறித்து தகவல் கோரப்பட்டால், இந்த விதிகளைப் பயன்படுத்தி அவற்றைத் தவிர்க்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டின் கணக்கு அறிக்கையின்படி, பிஎம் கேர்ஸ் நிதியில் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,283.7 கோடி ரூபாய் இருப்பு இருந்ததாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் நிதி என்பது எந்த ஒரு அரசாங்கத்தாலும் நிர்வகிக்கப்படும் அமைப்போ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்போ அல்ல. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மூலம் சுமார் 2,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இந்த அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிவுகளின் அடிப்படையில், ரூ.2,400 கோடிக்கும் அதிகமான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியைத் தவிர, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ.155 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications