‛ஆப்பிரிக்கர்கள் போல் தென்னிந்தியர்கள்’.. சர்ச்சையால் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த சாம் பிட்ரோடா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனை உடனடியாக மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அமெரிக்க குடியுரிமை பெற்று சாம் பிட்ரோடா தான் ராகுல் காந்தியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை வகுப்பதாக கூறப்படுகிறது.

Racist Remark Sam Pitroda resigns from the post of Chairman Of Indian Overseas Congress

மேலும் ராகுல் காந்திக்கு பல்வேறு விவகாரங்களில் சாம் பிட்ரோடா தான் ஆலோசனை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சாம் பிட்ரோடாவின் சமீபத்திய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தனியார் ஊடங்களுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த பேட்டியில் சாம் பிட்ரோடா, ‛‛இந்தியா என்பது பல்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதற்கான சிறந்து உதாரணம். இந்தியாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும் உள்ளனர்.

மேலும் இந்தியாவின் வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்'' என்று தெரிவித்து இருந்தார்.

சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து என்பது இனவெறி மற்றும் தோல் நிறத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்ட தொடங்கினர். மேலும் பிரதமர் மோடி தெலுங்கானா, ஆந்திராவில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில், சாம் பிட்ரோடாவின் கருத்தை மேடையில் கூறி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சியினரும் சாம் பிட்ரோடாவின் கருத்தை ஏற்கின்றார்களா? என கேள்வி எழுப்பினர்.

தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக சாம் பிட்ரோடா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை உடனடியாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+