அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில்.. தேசிய விருது! அசத்தும் ராடிகோ கைதானின் புதிய தயாரிப்பு
டெல்லி: ராடிகோ கைதானின் புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று, தனது முதல் விருதை வென்றுள்ளது.
நேற்று டெல்லியில் 7வது ஐகானிக் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்தான் ராடிகோ கைதானின் புதிய தயாரிப்பு விருதை வென்றிருக்கிறது. விழாவில், நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், G20 ஷெர்பாவுமான அமிதாப் காந்த் இந்த விருதை வழங்கியிருக்கிறார்.

டி.வி.9 நெட்வொர்க் ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், புதுமை, நிலைத்தன்மை மற்றும் புதிய வளர்ச்சி எல்லைகளைத் தழுவி, ஆடம்பரம், பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளை வடிவமைக்கும் முன்னோடிகள் தொலைநோக்கு பார்வையாளர்கள் இதில் கவுரவிக்கப்பட்டனர்.
விருது குறித்து ராடிகோ கைதானின் தலைமை இயக்க அதிகாரி அமர் சின்ஹா கூறுகையில், "ராடிகோ கைதானின் புதிய தயாரிப்பு தனது முதல் விருதை, அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 7வது ஐகானிக் விருதுகளில் இந்த பட்டத்தை வென்றது எங்களுக்கு ஒரு பெருமையான மைல்கல்.
காஷ்மீரின் ஆன்மாவால் ஈர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ராடிகோ கைதானின் புதிய தயாரிப்பு அற்புதமான ஒன்று. பனி மூடிய பள்ளத்தாக்குகள், பம்போர் குங்குமப்பூ, மற்றும் அதிகாலையில் தால் ஏரியின் கவித்துவமான அமைதி ஆகியவற்றால் உருவான தாயரிப்பு இது. எங்களுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், எல்லைகளைத் தாண்டி, உலகத் தரமான இந்தியப் பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு வர எங்களை உந்தி தள்ளுகிறது" என்று கூறினார்.
இந்த நிகழ்வு குறித்து டி.வி.9 நெட்வொர்க்கின் தலைமை வளர்ச்சி அதிகாரி ராக்டிம் தாஸ் கூறுகையில், "ராடிகோ கைதான் தொடர்ந்து தலைமைத்துவத்தையும் புதுமையையும் வெளிப்படுத்தி வருகிறது. இதன் புதிய தயாரிப்பு இவ்வளவு விரைவாக அங்கீகாரத்தைப் பெற்றது பாராட்டத்தக்கது. இத்தகைய சாதனைகள், உலகளவில் இந்தியா வலுவான அடையாளத்தை உருவாக்க முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன" என்று கூறினார்.
இந்த விருது வழங்கும் விழாவில், வியட்நாம் தூதுவர் எச்.இ. நுயேன் தான் ஹாய், ஜிம்பாப்வே தூதுவர் எச்.இ. ஸ்டெல்லா என்கோமோ, பல்கேரியா தூதுவர் எச்.இ. டாக்டர் நிகோலே யான்கோவ், மால்டா தூதுவர் எச்.இ. ரூபன் காசி, கிரீஸ் தூதுவர் எச்.இ. அலிகி குட்சோமிடோபூலோ, ஐஸ்லாந்து தூதுவர் எச்.இ. பெனடிக்ட் ஹோஸ்குல்ட்சன், சீஷெல்ஸ் தூதுவர் எச்.இ. லாலாடியானா அக்கூச், கென்யா தூதுவர் எச்.இ. அம்ப் பீட்டர் முனிரி மற்றும் கொமொரோஸ் கௌரவ தூதுவர் எச்.இ. கே.எல். கஞ்சு உள்ளிட்ட பல உலகளாவிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ராடிகோ கைதான் நிறுவனம்: ஒரு கண்ணோட்டம்
ராடிகோ கைதான் லிமிடெட் இந்தியாவின் பழமையான மற்றும் நிறுவனங்களில் ஒன்றாகும். 1943 ஆம் ஆண்டில் ராம்பூர் டிஸ்டில்லரி கம்பெனியாக தனது செயல்பாடுகளை இது தொடங்கியது. பல தசாப்தங்களாக, ராடிகோ கைதான் தரமான தயாரிப்புகள், புதுமை மற்றும் உலகளாவிய தரநிலைகளில் கவனம் செலுத்தி, ஒரு பல்வகைப்படுத்தப்பட்ட நுகர்வோர் மற்றும் வாழ்க்கைமுறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications