பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி காசியாபாத்தில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலின் உரிமையாளர் அமித் ஜெயின் (47) அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் கவுஷாம்பி பகுதியில் ராடிசன் ப்ளூ எனும் பைவ் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித் ஜெயின். இவருக்கு கிழக்கு டெல்லியில் வீடு உள்ளது.
அந்த வீட்டில் அமித் ஜெயின் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலம் அமித்தின் தற்கொலை மண்டவாலி காவல் நிலையத்திற்கு கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உடல் பிரேத பரிசோதனை
அங்கு அமித் ஜெயினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் அருகே தற்கொலைக்கான எந்த கடிதமும் இல்லை. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அமித் ஜெயினுக்கு சொந்தமாக நொய்டாவில் புதிய வீடு ஒன்று உள்ளதாம்.

அமித் ஜெயின்
அங்கு சென்ற அமித், காலை உணவை உண்டு விட்டு கிழக்கு டெல்லியில் உள்ள வீட்டுக்கு வந்திருந்த நிலையில் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்பத்துடன் நொய்டாவில் உள்ள புதிய வீட்டிற்கு குடியேற முடிவு செய்திருந்தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

நொய்டா டூ காசியாபாத்
மேலும் நொய்டாவிலிருந்து காசியாபாத் வீட்டுக்கு வரும் வழியில் தனது சகோதரர் கரனை அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டு காரை தனியாக ஓட்டிக் கொண்டு அமித் வீட்டுக்குச் சென்றுள்ளார். அமித்தின் மகன் எதையோ மறந்துவிட்டுவிட்டதால் வீட்டுக்கு தனது டிரைவருடன் சென்றபோதுதான் தந்தை தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜெயின் தற்கொலைக்கு காரணம் என்ன
அமித் ஜெயினின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏதேனும் கடன் தொல்லையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. நொய்டா வீட்டிலிருந்து வந்ததும் அமித் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால் அங்கு என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்











Click it and Unblock the Notifications