தன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்!
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்ததால் பிரபலம் ஆனவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங். இவர் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவான அங்கத்தை சைனிக்கை கரம் பிடிக்கிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அதிதி சிங் (வயது 32). இந்த தொகுதியில் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிதி சிங் எம்.எல்.ஏ. ஆனார். இவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிதி சிங் ஆதரவு தெரிவித்து சர்ச்சையில்சிக்கினார். இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் காங்கிரஸ் தலைமை அதிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இப்படி பல சர்ச்சைகளால் பிரபலம் ஆன அதிதி சிங்(32) தன்னை விட 3 வயது இளையவரான பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அங்கத் சிங் சைனிக்கை (29வயது) கரம்பிடிக்கிறார். அங்கத் சிங் சைனிக் பஞ்சாப் மாநிலம் ஷாகித் பகத் சிங் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.
இருவருக்கும் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஜோடி இந்து மற்றும் சீக்கிய முறைப்படி திருமணம் செய்கிறார்கள். நவம்பர் 23ம் தேதி இரு வீட்டார் தரப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் எம்எல்ஏ அகிலேஷ் சிங்கின் மகள் தான் அதிதி சிங். அகிலேஷ் சிங் ரேபரலி தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர் ஆவார்.
-
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications