ரபேல் ஒப்பந்தம்.. இடைத்தரகருக்கு கைமாறிய பல கோடி லஞ்சம்.. கண்டும் காணாமல் இருந்ததா சிபிஐ?
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடி லஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக பிரான்ஸ் செய்தி நிறுவனமான மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது. சுஷன் குப்தா என்ற இடைத்தரகருக்கு இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவரின் உதவியுடன் இந்த ரபேல் ஒப்பந்தம் இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
சுஷன் குப்தா என்ற இடைத்தரகருக்கு பொய்யான இன்வாய்ஸ் மூலம் மொரீஷியசில் இருக்கும் Intersteller Technologies என்ற பொய்யான நிறுவனத்தின் பெயரில் இந்த லஞ்ச பணம் கைமாறியதாக மீடியாபார்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லஞ்சம் கொடுத்து டீலிங் முடிக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஊடகம் வெளியிட்டது
இதற்கான பண பரிவர்த்தனை விவரங்களை அந்த மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டுள்ளது. 2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனை 2015க்கு பின் பாஜக ஆட்சியில்தான் செய்யப்பட்டதாக மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல் இது தொடர்பான ஆவணங்கள் 2018லேயே சிபிஐ அமைப்பிற்கும், அமலாக்கத்துறைக்கும் கிடைத்துள்ளதாக மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.

தெரிந்து நடவடிக்கை இல்லை
அதாவது ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடி லஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் இருந்து விஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஊழல் வழக்கை 2018ல் சிபிஐ விசாரித்து வந்தது. அந்த வழக்கை விசாரிக்கும் போது அதில் சுஷன் குப்தாவிற்கு பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது ரபேல் ஒப்பந்தத்திலும் சுஷன் குப்தா லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் வழக்கை சிபிஐ விசாரிக்கும் போது ரபேல் ஒப்பந்தத்திலும் சுஷன் குப்தாவிற்கு பணம் கைமாறியது குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஒப்பந்தத்திலும் இவர் லஞ்சம் பெற்றுள்ளார். ஆனால் இதை பற்றி தெரிந்தும் சிபிஐ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதே குற்றச்சாட்டு
இதே குற்றச்சாட்டு தற்போது என்டிடிவி ஊடகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்டிடிவி ஊடகம் வெளியிட்டுள்ள விசாரணை கட்டுரையில், 2019லேயே ரபேல் ஒப்பந்தத்தில் சுஷன் குப்தாவிற்கு பணம் கைமாறியது சிபிஐக்கு தெரிந்துள்ளது. அகஸ்டா வெட்ஸ்லேண்ட் வழக்கை சிபிஐ விசாரிக்கும் போது தீரஜ் அகர்வால் என்ற நபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் ஐடிஎஸ் என்று நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சுஷன் குப்தாவிற்கு முறைகேடாக பணம் கைமாற தீரஜ் உதவி உள்ளார்.

உதவி
இதே தீரஜ் அகர்வால்தான் ரபேல் ஒப்பந்தத்திலும் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்ச பணம் சுஷன் குப்தாவிற்கு கைமாற உதவி உள்ளார். இதை சிபிஐ விசாரணையில் 2019லேயே தீரஜ் அகர்வால் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதாவது சுஷன் குப்தா லஞ்சம் பெற்றார் என்று தீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதை தெரிந்தும் சிபிஐ இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. டஸால்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததும் தெரிந்தும் அதற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

சிபிஐ
சிபிஐ அப்போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் டஸால்ட் நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கும். இந்த ரபேல் ஒப்பந்தம் ரத்தாகி இருக்கும். நீதி விசாரணையும் நடந்து இருக்கும். ஆனால் டஸால்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததும் தெரிந்தும் சிபிஐ இதில் கண்டும் காணாமல் இருந்தாக என்டிடிவி கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக டாஸ்ஸால்ட் நிறுவனம் 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக பிரான்ஸ் செய்தி நிறுவனமான மீடியாபார்ட் ஏற்கனவே குற்றஞ்சாட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் இந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications