தயாரானது ரபேல் சிஏஜி அறிக்கை.. மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.. விரைவில் லோக்சபாவில் தாக்கல்!
ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தம் குறித்து முக்கிய திருப்பம் இன்னும் சில நாட்களில் நடக்க போகிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைவரும் எதிர்பார்க்கும் சிஏஜி அறிக்கை இன்றோ, நாளையோ லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் நாளை இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.

ரபேல் ஒப்பந்தம்
ரபேல் ஒப்பந்தம் மூலம் கூடுதல் விலைக்கு குறைவான விமானங்களை மத்திய அரசு வாங்கி இருக்கிறது என்பதுதான் காங்கிரஸ் பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டு. 36 விமானங்களை ஒரு விமானத்திற்கு 41% கூடுதல் விலை வைத்து மத்திய அரசு வாங்கி இருக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

வழக்கு விசாரணை
இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. 5 மனுதாரர்கள் இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீதான விசாரணை எப்போது வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்படலாம்.

தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குடியரசுத்தலைவரின் அனுமதி பெற்றபின் இது லோக்சபாவில் இன்றோ நாளையோ தாக்கல் செய்யப்படும்.

விலை
இதில் ரபேல் விமானத்தின் விலை என்ன என்ற விவரம் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து விவரங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கை ரபேல் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications