மக்கள் பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா.. எப்படி ரபேல் ஒப்பந்தம் நடந்தது.. நீதிபதி ஜோசப் பொளேர்!
ரபேல் ஒப்பந்த வழக்கில் மத்திய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி கே.எம் ஜோசப் சரமாரி கேள்விகளை எழுப்பி மத்திய அரசு வழக்கறிஞரை திணறடித்தார்.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்த வழக்கில் மத்திய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி கே.எம் ஜோசப் சரமாரி கேள்விகளை எழுப்பி மத்திய அரசு வழக்கறிஞரை திணறடித்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரரை யார் தேர்வு செய்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக வேறு நிறுவனம் (ரிலையன்ஸ்) எப்படி தேர்வு செய்யப்பட்டது என்று நீதிபதி கே.என் ஜோசப் கேள்வி எழுப்பினார்.
[ரபேல் டீலின் இந்தியர் பார்ட்னர் யார் என்றே தெரியாது.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி!]

தெரியவில்லை
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, அரசுக்கு டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அவர்கள் இதை எங்களிடம் கூறவில்லை. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரமாரி கேள்வி
இதற்கு நீதிபதி ஜோசப் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்:
என்ன பதில் இது. இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி கேள்வி கேட்டால் இப்படியா பதில் சொல்வது,
ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட போகும் பங்குதாரர் தெரியாமல் விமானம் வாங்குவது. மக்கள் மீது அக்கறை இல்லையா.
இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா? இதுதான் இந்திய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு துறை அளிக்கும் மரியாதையா.
இந்த ஒப்பந்த விதிகளை மாற்றியது யார், எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள் என்று சரமாரி கேள்வி கேட்டார்.

என்ன பதில்
இதில் எப்போதும் போல இருந்த விதிகள்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளில் மாற்றம் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு கூறியது. ஆனால் அதோடு நிற்காமல் கார்கில் போரில் இந்தியா பல வீரர்களை இழந்தது. இந்த விமானம் இருந்திருந்தால் கார்கில் போரை வென்று இருக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.

கோபபட்டார்
அதற்கு நீதிபதி ஜோசப் கார்கில் போர் எப்போது நடந்தது. இந்த ஒப்பந்தம் எப்போது நடந்தது. ஏன் அதை பற்றி இங்கு பேசுகிறீர்கள், என்று கோபமாக கேட்டார். அதன்பின் மத்திய அரசின் வழக்கறிஞர், இதில் எல்லா நடைமுறையும் சரியாகவே பின்பற்றி இருக்கிறார்கள் என்று கூறி வாதத்தை முடித்தார்.

யார் இந்த ஜோசப்
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட பதவி உயர்வை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து. இதை ஏற்காமல் கொலீஜியத்திற்கு திருப்பி அனுப்பியது. கொலீஜியம் மீண்டும் அழுத்தமும் கொடுத்த பின்பே அவர் பதவி உயர்வு பெற்றார். பாஜகவிற்கு எதிரான வழக்குகளில் நிறைய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

வரலாறு
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக சில அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். உத்தரகாண்டில் தேவையில்லாமல் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்ட போது, அதை கண்டித்து மீண்டும் ஹரிஷ் ராவத் தலைமையிலான பெரும்பான்மை காங்கிரஸ் ஆட்சியை அமர வைத்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாகவே அவர் பதவி உயர்வை மத்திய அரசு எதிர்த்தது.











Click it and Unblock the Notifications