ரபேல் டீலின் இந்தியர் பார்ட்னர் யார் என்றே தெரியாது.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி!

ரபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு புதிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் அளித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரபேல் விமானம் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு புதிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் அளித்து இருக்கிறது.

    ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தொடுத்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

    [ரஃபேல்.. உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான விமானப்படை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி ]

    யார் ?

    யார் ?

    இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரரை யார் தேர்வு செய்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக வேறு நிறுவனம் (ரிலையன்ஸ்) எப்படி தேர்வு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    பதில்

    பதில்

    இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நாங்கள், டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை தேர்வு செய்யவில்லை. அதை தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வு செய்தது என்று கூறியது.

    யார் என்றே தெரியாது

    யார் என்றே தெரியாது

    மேலும் எங்களுக்கு டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடும் கோபம்

    கடும் கோபம்

    இதையடுத்து நீதிபதி கேஎம் ஜோசப், என்ன பதில் இது. ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட போகும் பங்குதாரர் தெரியாமல் விமானம் வாங்குவது, மக்கள் மீது அக்கறை இல்லையா? இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா? இந்த ஒப்பந்த விதிகளை யார் மாற்றியது, எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள் என்று சரமாரி கேள்வி கேட்டனர்.

    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    இதில் எப்போதும் போல இருந்த விதிகள்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளில் மாற்றம் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு கூறியது. இந்திய ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்றுதான் இந்த ஒப்பந்தமே செய்யப்பட்டது. இது மிகவும் முக்கியமான ஒப்பந்தம் என்று கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+