விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்
திருச்சி: திருச்சியில் இன்று விவசாயக் கடன் பற்றி பேசிய முதல்வர் விஜய், "கவலையேப் படாதீங்க விவசாய மக்களே.. இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்க கூடவே நின்று வேலை செய்யத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறான்.. இந்த ஒரு மாதத்தில் என்ன பண்ண முடியுமோ அதைத் தான் செய்திருக்கிறேன்" என கூறினார்.
தமிழக முதல்வர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கவலை அளிப்பதாகவும், தேர்தலுக்கு முன்பு அளித்த விவசாயக் கடன் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் தெரிவித்த நிலையில் விஜய் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி
200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் அறிவிச்சோம். அதில் ஏற்கனவே இருந்த 100 யூனிட் இலவசம் என்பது திமுக கொடுத்தது இல்லை.. அது மேடம், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம். பதவி போன அந்த கடுப்பில் ஸ்டாலின் சார் ஒரே அறிக்கையாக அடித்து விடுகிறார். நீங்க என்ன செஞ்சீங்க உங்க ஆட்சியில.. மக்கள் பணத்தை, டாஸ்மாக்கில் கொள்ளையடித்த அந்த பணத்தை ஊழல் செய்த அந்த ஃபைலை க்ளோஸ் பண்றதுக்கு அழையா அழைந்தீர்கள். ஆனால் நாங்க இந்த விஜய் மக்களுக்கு தொந்தரவாக இருக்கின்ற அந்த டாஸ்மாக் கடைகளை குளோஸ் பண்ணினான்.
விவசாய கடன் தள்ளுபடி செய்தோம். இந்த ஒரு மாதத்தில் என்ன பண்ண முடியுமோ அதனைத் தான் செய்திருக்கிறோம். நீங்க தான் நிதி சம்பந்தமாக இருக்கின்ற எல்லா கேட்டையும் லாக் பண்ணி வச்சுட்டு போயிருக்கீங்களே.. அதை எல்லாம் சரி செய்ய வேண்டாமா.. ஒழுங்குப் படுத்த வேண்டாமா? அதனால் நான் மறுபடியும் சொல்றேன். இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்க கூடவே நின்று வேலை செய்யத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கவலையேப் படாதீங்க விவசாய மக்களே..
வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டு
இந்த திமுகவும் மற்றும் பலரும் ஒன்னா சேர்ந்துக்கிட்டு விஜய் ஆட்சி அமைத்துவிட கூடாது என்று சொல்லி ஒரு கூத்து ஒன்னு பண்ணாங்களே.. அந்த 5 நாட்கள் இருக்கே.. அட அடா.. நமக்குல்லாம், ஆஹா.. இப்படி எல்லாம் கூட நடக்குமோ என்ன என்ன தோன்றியது.. என்னா கூத்து.. பியூச்சர் என்னவா இருக்கும் என்று சொல்கிறேன்.. உண்மையாக மக்களுக்காக உழைத்த விஜய்யா.. இல்லை.. இந்த விஜய்யோட ஆட்சி அமைந்துவிட கூடாது என நினைத்த ஸ்டாலின் சாரா.. அவ்வளவு தான். இதற்கு நடுவில்ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி..
அவங்க தான் ஆட்சியிலேயே இல்லையே அவர்களை ஏன் விமர்சிக்குறீங்க, ஏன் குறை சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.. வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டு சென்றவர்களை வெளிச்சம் போட்டு காட்டாமல்.. பின்ன வேற என்ன சொல்வாங்க.. இதெல்லாம் மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா?" என்று பேசினார்.
கவலை தெரிவித்த விவசாயிகள்
தமிழக முதல்வர் விஜய் கடந்த வாரம், "கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்து இருந்தார். மேலும் இந்த திட்டமானது, கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும். தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது "கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது" கவலை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தான் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியுள்ளார்.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா















Click it and Unblock the Notifications