துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!
சென்னை: தமிழக பாஜகவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைவராக இராம.சீனிவாசன் நியமிக்கப்படலாம் எனவும், நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சராக்கப்படலாமென தகவல்கள் உலாவுகின்றன.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, காவல்துறை பணியை ராஜினாமா செய்த பின்னர் அரசியலுக்குள் நுழைந்தார். 2021-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அவர், கட்சியின் முகமாக மாறினார்.

"என் மண் என் மக்கள்" நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர் பிரச்சாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பாஜகவை தமிழக அரசியலில் பேசப்படும் சக்தியாக மாற்ற முயன்றார். ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தபோது நிலைமை மாறியது.
அண்ணாமலை
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அண்ணாமலை மற்றும் அதிமுக தலைமையிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெளிப்படையாக பேசப்பட்டது. அதன் பின்னர் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு கட்சியின் முக்கிய முடிவுகளில் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
அமித் ஷா
தேசிய அளவிலான பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டாலும், எந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பின்போது ஐந்து பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை நிதின் நபினிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
பாஜக
அந்த கடிதத்தில், தமிழக பாஜகவில் தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், தவறான அரசியல் முடிவுகள் மற்றும் அதிமுக கூட்டணியை நீடித்ததன் விளைவாக கட்சியின் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உட்கட்சி மோதல்கள், நிர்வாக குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அண்ணாமலையின் ராஜினாமாவை உடனடியாக ஏற்க பாஜக தேசிய தலைமை தயாராக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர்
அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெறும் வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து அவர் அவசரமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனையில், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரை தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராம சீனிவாசன்
அதில் முன்னணியில் இருப்பவர், தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் இராம.சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர். கட்சியின் கொள்கைகளை ஆழமாக அறிந்தவர் என்பதோடு, அறிவுசார் தளத்தில் பாஜகவின் முகமாக செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையின் ஆக்ரோஷமான அரசியலுக்கு மாற்றாக, நிதானமான மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு தலைமையை மேலிடம் விரும்புவதே இராம.சீனிவாசன் பெயர் முன்னுக்கு வரக் காரணம்.
பாஜக மேலிடம்
நயினார் நாகேந்திரன் போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், கட்சியின் சித்தாந்த பிடிப்பு மற்றும் நிர்வாகத் திறன் அடிப்படையில் இராம.சீனிவாசனுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த இவருடைய நியமனம் உதவும் என பாஜக மேலிடம் கணக்கு போடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
அதேபோல், நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கும் வாய்ப்பும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக பாஜக அமைப்பை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு கே.டி. ராகவன் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் கமலாலய வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications