காங். மூத்த தலைவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு என ராகுல் சொல்லவே இல்லை.. ரந்தீப்சிங் சுர்ஜிவாலா
டெல்லி: காங்கிரஸ் மேலிடத்துக்கு விமர்சன கடிதம் எழுதிய தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பு என ராகுல் காந்தி கூறவே இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கடுமையான புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு என செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்தார் என்கிற ஒரு தகவல் காட்டுத் தீயாக பரவியது.
மேலும் பாஜகவுடன் தொடர்பு என நிரூபித்தால் பதவியில் இருந்து விலகுகிறேன் என குலாம் நபி ஆசாத்தும் ஆவேசம் காட்டினார். அதேபோல் ராகுல் காந்திக்கு எதிராக மற்றொரு மூத்த தலைவர் கபில் சிபலும் ட்விட்டரில் பதிவு போட்டார். பின்னர் ராகுல் காந்தி அப்படி ஒரு கருத்தை கூறவே இல்லை; தவறான தகவல் பரப்பப்படுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா விளக்கம் அளித்தார்.
இதனால் கபில் சிபலும் ராகுல் காந்திக்கு எதிராக போட்ட ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். ராகுல் காந்தியால் கிளம்பிய சர்ச்சை தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications