டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக்.கில் புகுந்த இந்திய விமானப்படை… ராகுல் காந்தி சல்யூட்… பெருமிதம் கொண்ட கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளுத்த 'மிராஜ்'..1000 கிலோ வெடி பொருட்கள்.. தீவிரவாத முகாம்கள் காலி.. வீடியோ

    டெல்லி:பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

     Rahul gandhi and arvind kejriwal praised the attack of indian air force in pakistan

    பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

    போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படையானது வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது. இந்திய விமானப்படை தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடி பொருள்களையும், தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானங்களை பயன்படுத்தி இருக்கிறது.

    உலக நாடுகள் மட்டுமல்ல... பாகிஸ்தானே அரண்டு போயிருக்கும் இந்த தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்திய விமானப்படைக்கு அவர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலின் போது நாட்டின் ஒற்றுமைக்கு குரல் கொடுப்போம்... மத்திய அரசின் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். அவர் தற்போது நமது ராணுவத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு பாராட்டு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டுள்ளது. நமது ராணுவத்துக்கு ஒரு சல்யூட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப் படுத்தியுள்ளனர். இந்திய விமானப்படை வீரர்களின் வீர தீரச் செயலுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Congress leader Rahul Gandhi and Aam Aadmi Party leader and Delhi Chief Minister Kejriwal have praised the attack on Indian Air Force in Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X