டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி பொதுக் கூட்டத்தில் மோடியை விமர்சனம் செய்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா இல்லை கோட்சேவின் இந்தியாவின் வேண்டுமா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    குலதெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிங்க.. துரைமுருகன் உருக்கம்!குலதெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிங்க.. துரைமுருகன் உருக்கம்!

    மற்றொரு கையில்

    மற்றொரு கையில்

    ஒரு கையில் அன்பும், சகோதரத்துவமும் மற்றொரு கையில் வெறுப்பும் அச்சமும் உள்ளது. காந்தி பயமில்லாதவர். ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேயர்களுடன் அன்பையே பாராட்டினார்.

    இந்தியா

    இந்தியா

    ஆனால் சவார்கரோ தன்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதியவர். பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி அருமையாக பேசி வருகிறார்.

    சீன உற்பத்தி

    சீன உற்பத்தி

    ஆனால் அவரது சட்டை, கோட், ஷூ, செல்போன் ஆகியவை மேட் இன் சீனாவாக உள்ளது. மசூர் அஸாரை விடுவித்தது காங்கிரஸ் கிடையாது. பாஜகவினர் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன் என்றார் ராகுல் காந்தி.

    மசூத் அஸார்

    மசூத் அஸார்

    தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் பிடிபட்டிருந்தார். ஆனால் ஒரு விமானத்தை கடத்தி, மசூத் அஸாரை விடுவிக்கும் படி தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். பயணிகளின் பாதுகாப்பை கருதி, அவர்களது குடும்பத்தினரை விட்டு பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இதனாலேயே மசூத் அஸாரை விடுவிக்க நேர்ந்தது என பாஜக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Congress President Rahul Gandhi asks whether the people wants Gandhi's power or Kodse's power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X