வயநாடு டூ தமிழ்நாடு.. 2024ல் தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டி? எதிர்பார்ப்பை ஏற்றிய நிகழ்வுகள்
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடலாமே என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு பப்பு என கிண்டல் செய்வதுண்டு. ஆனால் அண்மைக்காலமாக அவரது நாடாளுமன்ற பேச்சுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் விலை, பெகாசஸ் உளவு விவகாரம், இந்தியா சீனா விவகாரம், இமாச்சலில் சீனா அமைத்துள்ள வீடுகள் உள்ளிட்டவற்றில் ராகுலின் பேச்சுகளில் தீப்பொறி பறந்தன.
நேற்றைய தினம் மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது ராகுல் காந்தி பேசிய பேச்சுகள் வைரலாகி வருகிறது. அவரது பேச்சுகள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம்
தமிழகத்தில் தாமரை மலராது என அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் பாஜகவினரோ நிச்சயம் மலர வைப்போம் என கூறி வருகிறார்கள். இதே கருத்தை ராகுலும் மக்களவையில் பேசியது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களின் மனங்களை மகிழ்ச்சியடைய செய்துவிட்டது.

வாழ்நாளில் ஆள முடியாது
தமிழகத்தை பாஜக தன் வாழ்நாளில் ஆளவே முடியாது என ராகுல் தெரிவித்தார். இதை தமிழக மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறு விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ராகுல் செய்தியாளர்கள் சந்திப்பில் "இந்த 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசே திரும்ப பெறும். இன்று நான் சொல்கிறேன், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ராகுல் பேச்சு
அதே போல் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுவிட்டது. இதையும் ராகுல் பேசிய பேச்சையும் தமிழக மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். மத்திய அரசை பலமுறை ராகுல் காந்தி விமர்சித்திருந்தாலும் நேற்றைய தினம் அவர் தமிழகத்திற்காக பேசிய பேச்சுகளை தமிழக நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

நான் தமிழன் தானே
தமிழகம் குறித்து ஏன் அவ்வளவு பேசினீர்கள் என செய்தியாளர்கள் ராகுலிடம் கேட்டதற்கு நான் தமிழன் தானே என அவர் கூறியிருந்தார். இதையடுத்து ராகுல் காந்தி வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி தமிழக மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார்.

கருத்தரங்கு
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மாணவிகளுடன் அவர் உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் கேள்வி கேட்க சார் என அழைத்தார். அதற்கு ராகுல் என்னை சார் என்று அழைக்காதீர்கள். ராகுல் என்றே அழையுங்கள் என கேட்டுக் கொண்டார். மாணவிகளின் கேள்விகளுக்கு ராகுல் உற்சாகமாக பதில் அளித்தார்.

கரூர் பிரச்சாரம்
தமிழகத்தில் ஒரு கல்லூரியில் புஷ் அப் எடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேடைக்கு கீழ் இருந்த மாணவி ஒருவருடன் மேடையில் இருந்தபடி முட்டி போட்டுக் கொண்டு தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். கரூரில் பிரச்சாரத்தின் போது சிறுமி ஒருவர் ராகுலுடன் செல்ஃபி எடுக்க பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய போது அவரது ஆடை விலகியதை நாசுக்காக சரி செய்து விட்டார். இப்படி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ராகுல்.
Recommended Video

2024 இல் தமிழகத்து எம்பியாவாரா ராகுல்
தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ள சிவகங்கை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்சி லோக்சபா தொகுதியில் வரும் 2024 இல் ஏதேனும் ஒன்றில் நின்று போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டும் என தமிழக இளைஞர்கள் கருதுகிறார்கள். மேலும் தமிழகத்திலிருந்து போட்டியிட்டு ராகுல் பிரதமராகவும் ஆகிவிட்டால் தமிழகத்திற்கு எத்தனை பெருமை என பேசி வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் இருந்து கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டது போல் இந்த முறை தமிழகத்திலிருந்து ராகுல் போட்டியிடலாமே என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. கடந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலின் போதே ராகுல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications