Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்மோகன் சிங் உடலை தோளில் சுமந்த ராகுல்.. இறுதி சடங்கில் கலங்கி நின்ற மோடி, சோனியா, கார்கே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி அவரது உடலை தோளில் வைத்து சுமந்து சென்றார். அப்போது இறுதிசடங்கில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் கலங்கி நின்றனர்.

நம் நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் அரசியலில் நுழைந்து செயல்பட்டு வந்தார். முதல்வர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்தார்.

பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நம் நாட்டின் நிதி நிலைமையை சீர்ப்படுத்தினார். சரிவில் இருந்த பொருளாதாரத்தை மீட்டார். அதன்பிறகு தான் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். நம் நாட்டின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.

rahul-gandhi-carrying-manmohan-singhs-mortal-on-his-shoulders

இவர் நேற்று முன்தினம் காலமானார். தனது 92வது வயதில் மன்மோகன் சிங்வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மன்மோகன் சிங் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு இன்று காலையில் மன்மோகன் சிங் உடல் அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அப்போது மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். நிகம்போத் காட் பகுதிக்கு இறுதி ஊர்வல வாகனம் வந்த பிறகு மன்மோகன் சிங்கின் உடலை உறவினர்கள் தோளில் சுமந்தனர். அப்போது ராகுல் காந்தியும் அவர்களுடன் சேர்ந்து மன்மோகன் சிங்கின் உடலை தோளில் சுமந்து சென்றார்.

அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதி சடங்கில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்பட பலர் சோகமாக நின்றிருந்தனர். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+