உண்மையான நெருக்கடியை.. பட்ஜெட் கண்டுக்கக்கூட இல்லை! ராகுல் காந்தி விளாசல்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் உண்மையான நெருக்கடி குறித்து பட்ஜெட் கண்டுக்கவில்லை என்று விமர்சித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வீழ்ச்சியடைந்த உற்பத்தித் துறை, துயரில் உள்ள விவசாயிகள் போன்ற நாட்டின் யதார்த்தமான பல பிரச்சினைகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பதிவில் காந்தி குறிப்பிட்டதாவது, "இளைஞர்களுக்கு வேலை இல்லை. உற்பத்தி சரிவு. முதலீட்டாளர்கள் மூலதனத்தை ஈர்க்கவில்லை. குடும்ப சேமிப்பு சரிந்து வருகிறது. விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். வரவிருக்கும் உலகளாவிய அதிர்ச்சிகள் - இவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. திசை மாற்றத்தை மறுக்கும், இந்தியாவின் நிஜ நெருக்கடிகளுக்குக் கண்ணிருந்தும் குருடான ஒரு பட்ஜெட் இது" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 2027 நிதியாண்டுக்கான மூலதனச் செலவு இலக்கு ரூ. 11.2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 12.2 லட்சம் கோடியாக கணிசமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், 2ம் மற்றும் 3ம் அடுக்கு நகரங்கள் உட்பட நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல புதிய நடவடிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல், வர்த்தக மோதல்கள், அமெரிக்க வரிகள் மற்றும் ஏற்றுமதி சரிவு போன்ற பின்னணிகளில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் மூன்றாவது பட்ஜெட் அறிக்கை ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications