வெறும் 3 நாட்களில் மாறிய ராகுலின் அரசியல் வாழ்க்கை.. வயநாடு தொகுதி காலி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: வெறும் 3 நாட்களில் ராகுலின் அரசியல் வாழ்க்கை தலைகீழாக மாறி உள்ளது. சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதற்கு அடுத்த நாள் (நேற்று) மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இன்று வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குஜராத் அமைச்சர்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார்.
நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

மோசமான முன்னுதாரனம்
சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது.

மக்களவை செயலகம்
இந்நிலையில் சூரத் நீதிமன்றம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் நகல்களை மக்களவை செயலகம் அனுப்பி வைத்து இருந்தது.

தேர்தல் ஆணையம்
மக்களவை செயலகம் இப்படி அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அதாவது இன்றே, இந்திய தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவரான ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை வெறும் 3 நாட்களில் தலைகீழாக மாறி உள்ளது.

எல்லாமே மாறும்
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மக்களவை செயலகத்தின் தகுதி நீக்கம், எம்பி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு எல்லாமே வெறும் 3 நாளில் நடந்துள்ளது. ராகுல் காந்தியின் மேல்முறையிட்டு மனுவினை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடைவிதித்தால், இந்த அறிவிப்புகள் எல்லாமே ரத்து செய்யப்படும். எனவே ராகுல் காந்தியின் மேல்முறையிட்டு வழக்கில் என்ன பதில் வருகிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications