நான் தலைவர் அல்ல.. டிவிட்டரிலும் பதவியைத் துறந்தார் ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல்காந்தி, டிவிட்டர் பக்கத்திலும் அப்பதவியைத் துறந்துள்ளார்.
இதற்கு முன்பு ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் (https://twitter.com/RahulGandhi?lang=en) ராகுல் காந்தி, தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் என்று இடம் பெற்றிருந்தது. தற்போது அதை நீக்கி விட்டார் ராகுல்.

அதற்குப் பதிலாக, ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர், மக்களவை உறுப்பினர் என்று மட்டும் உள்ளது. தலைவர் பதவியை டிவிட்டரிலும் அவர் துறந்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2017ம் ஆண்டு தனது தாயாரிடமிருந்து தலைவர் பதவியைப் பெற்றார் ராகுல் காந்தி. ஆனால் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து தனது தலைவர் பதவியை அவர் உதறியுள்ளார்.
அவரது ராஜினாமா குறித்து இத்தனை நாட்களாக பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று மிக நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டு தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தி விட்டார் ராகுல் காந்தி. இதனால் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தலைவர் பதவியிலிருந்து விலகிய கையோடு டிவிட்டர் பக்கத்திலும் அவர் பதவியை நீக்கி விட்டார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications