சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவு.. ராகுல் காந்தி ட்விட்டரில் இரங்கல்
டெல்லி: சமூக ஆர்வலரும் பழங்குடியின மக்கள் நலனுக்கு குரல் கொடுத்தவருமான ஸ்டான் சுவாமி மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்டான் சுவாமி, ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்டான் சுவாமி (84) உடல்நலக் குறைவால் காலமானார்.

ஸ்டான் சுவாமி மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ஸ்டான் சுவாமி காலமான செய்தியை கேட்டு மனம் வருந்தினேன். ஆழ்ந்த இரங்கல். நீதியை நிலைநாட்டி. மனிதாபிமானத்தை கடைப்பிடித்தார் என ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications