Rahul Gandhi: சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல் காந்தி.. பாகிஸ்தான் ஆதரவாளர் என பாஜக தாக்கு
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, ராகுல் காந்தி பாகிஸ்தான் ஆதரவாளர் என குற்றம்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றினார். இதில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் பற்கேற்கவில்லை.

இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா தனது x பக்கத்தில், "சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த நாடே கொண்டாடி வருகிறது. ஆனால் நாட்டின் கொண்டாட்டத்தை பாகிஸ்தான் விரும்பியான ராகுல் காந்தி புறக்கணித்திருக்கிறார். இது மிகவும் வருத்தமானது. அரசியலமைப்பு குறித்து பேசும் ராகுல் காந்தி, அதற்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? ராணுவத்திற்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் மறுபுறம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும், கார்கேவும் கொட்டும் மழையிலும் பங்கேற்றிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications
