அமித்ஷா பற்றி சொன்ன வார்த்தை.. ராகுலுக்கு பறந்த உரிமை மீறல் நோட்டீஸ்.. சிக்கலோ சிக்கல்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 'பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026' தொடர்பான விவாத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. ராகுல் காந்தி மீது பாஜக எம்பிக்கள் நடவடிக்கை கோரிய நிலையில் லோக்சபா செயலகம் சார்பில் அவருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 28 ம் தேதிக்குள் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று உரிமை மீறல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

rahul-gandhi-gets-privilege-notice-over-the-remarks-against-union-minister-amit-shah

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுத்தல்) திருத்த மசோதா 2026 லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீது லோக்சபாவில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தியது தொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி பேசுகையில், ''டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளின் காயங்கள் உள்ளன. போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். மின்சாரம் பாய்ச்சிய மற்றும் ஆணியுடன் கூடிய லத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறையை மத்திய உள்துறை அமைச்சருக்கு (அமித்ஷா) தெரியாவிட்டால் அவர் திறமையற்றவர். தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அவர் குற்றவாளி. மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது '' என சாடினார்

மேலும் முட்டாள்கள், குருட்டு விசுவாசிகள் போன்ற வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் சபையில் பேச தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்தி உள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக 'சபை உரிமை மீறல்' மற்றும் 'சபையை அவமதித்தல்' உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி அனுராக் தாகூர் தலைமயைில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா செயலகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நோட்டீஸில் ராகுல் காந்தி தனது கருத்துகள் பற்றி ஆகஸ்ட் 28 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பதிலளித்ததும் அதனை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி லோக்சபா செயலகம் முடிவெடுக்கும். அவரது விளக்கம் திருப்திகரமாக இருந்தால் 'அவை உரிமை மீறல் குழு'விற்கு (Committee of Privileges) அனுப்பப்படாமலேயே இந்த விவகாரம் முடிவுக்கு வரும். திருப்தியற்றதாக கருதப்பட்டால் இந்த விவகாரம் 'அவை உரிமை மீறல் குழு'விற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குழுவிற்கு பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமை வகிக்கிறார். இதனால் ராகுல் காந்தி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே இந்த விவகாரம் ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+