‛நூரி’.. முஸ்லிம் பெண்களை அவமதித்த ராகுல்? நாய்க்குட்டியின் பெயரால் சர்ச்சையை கிளப்பும் ஓவைசி கட்சி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கோவாவில் இருந்து ஆசையாக வாங்கிய நாய்க்குட்டியை தனது தாய் சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் நாய்க்குட்டிக்கு வைக்கப்பட்ட ‛நூரி' எனும் பெயரால் ராகுல் காந்தியை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் செய்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களை அவர் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.
இப்படி பல செயல்களை ராகுல் காந்தி செய்து வந்தாலும் கூட சமீபகாலமாக தாய் சோனியா காந்தியுடன் அதிகமாக நேரமும் செலவிட்டு வருகிறார். சோனியா காந்தி குறித்த போட்டோக்களை தனது வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி சமீபத்தில் கோவாவில் இருந்து வாங்கிய ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார்.
இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். பிறந்து 3 மாதங்களே ஆன இந்த நாய்க்குட்டியை சோனியா காந்திக்கு வழங்கியது, சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. அப்போது ராகுல் காந்தி அந்த நாய்க்கு ‛நூரி' என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த வீடியோவை பலரும் ரசித்த நிலையில் தான் தற்போது ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ள ‛நூரி' எனும் பெயர் தான். இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக முகமது பர்ஹான், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதுதொடர்பாக முகமது பர்ஹான் கூறியதாவது:
‛‛ராகுல் காந்தி தனது செல்ல நாய்க்குட்டிக்கு ‛நூரி' என பெயரிட்டுள்ளார். இதனை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மேலும் ராகுல் காந்தியின் செயல்பாடு என்பது வெட்கக்கேடானது. முஸ்லிம் மகள்கள் ஏராளமானவர்கள் நூரி எனும் பெயரை கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முஸ்லிம் மகள்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மரியாதையை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது'' என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications