டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டீஸ்கர் மாநில முதல்வர் யார்? ராகுல் காந்தி தொடர் ஆலோசனை.. ட்விட்டரில் க்ளூ?

Google Oneindia Tamil News

டெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே கமல்நாத் மற்றும் அசோக் கெலாட் ஆகியோரை முதல்வர்களாக அறிவித்துள்ளார் ராகுல்காந்தி. ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்காக தீவிரமான போட்டியில் இருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi meets leaders over Chhattisgarh Chief Minister

இதையடுத்து, காங்கிரஸ் அபார வெற்றி பெற்ற சட்டிஸ்கர் மாநிலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் இன்று சட்டீஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் உள்ள டி.எஸ்.சிங் டியோ, தம்ராத்வாஜ் சாஹு, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வர் ரேஸில் முதலில் உள்ளவருமான பூபேஷ் பகேல் மற்றும் சரன் தாஸ் மஹந்த் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மத்திய பார்வையாளர்கள், மல்லிகார்ஜுன் கார்கே, சத்தீஸ்கர் மாநில கட்சிப் பொறுப்பாளர் பி.எல்.புனியா ஆகியோரும் பங்கேற்றனர்.

இதனிடையே, இன்று மாலை ராகுல் காந்தி ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் மனது அல்லது திட்டம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும் அது விஷயமல்ல, நீங்கள் ஒரு தனி விளையாட்டு விளையாடுகிறீர்களானால், நீங்கள் எப்போதுமே ஒரு அணியை இழக்க நேரிடும்- ரீட் ஹாஃப்மேன்" என்று தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் முதல்வர் பெயரை அறிவிப்பதற்கு முன்பாகவும், ராகுல்காந்தி இதுபோல ட்விட்டரில் க்ளூ கொடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

English summary
"No matter how brilliant your mind or strategy, if you’re playing a solo game, you’ll always lose out to a team. – Reid Hoffman" Rahul Gandhi Tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X