Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமராங்க்.. மன்மோகன் சிங் அரசின் சட்டத்தை எதிர்த்த ராகுல் காந்தி! அவருக்கே எதிராக திரும்பிருச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருப்பதால் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மேற்கொண்ட நகர்வு தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அந்த அவசர சட்டம் என்ன? விரிவாக காண்போம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற லில்லி தாமஸ் vs இந்திய அரசு வழக்கில் நாட்டின் தேர்தல் சட்டத்தின் கீழ், தண்டனை பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் நீதித்துறையின் அனைத்து மேல்முறையீடுகளை கடந்தும் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரை பதவியில் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தி பிரிவு 8(4) ஐ உச்சநீதிமன்றம் நீக்கியது. நீக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிதிகள் 3 மாதங்களுக்குள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்கிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதன் காரணமாக குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்ட மேலவை உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே உடனடியாக அவர்கள் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

 அவசர சட்டம்

அவசர சட்டம்

இதனால் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உதவும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அப்போது அதை எதிர்த்தது பாரதிய ஜனதாவோ இதர எதிர்க்கட்சிகளோ இல்லை.

ராகுல் காந்தியின் நகர்வு

ராகுல் காந்தியின் நகர்வு

மன்மோகன் சிங் அரசின் அந்த அறிவிப்பை எதிர்த்தது அதே கட்சியை சேர்ந்த ராகுல் காந்திதான். ஆம், மன்மோகன் சிங் அரசாங்கம் இயற்ற அவசர சட்டத்தை 'முழுமையான முட்டாள்தனம்' என்று கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமர்சித்தார் ராகுல் காந்தி. அதை கிழித்து எரிய வேண்டும் எனவும் அவர் முழக்கமிட்டார். ராகுல் காந்தியின் இந்த பகிரங்க விமர்சனம் காரணமாக மன்மோகன் சிங் அரசு அதை வாபஸ் பெற்றது.

பிரதமர் நாற்காலி

பிரதமர் நாற்காலி

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி சொந்த கட்சி என்று பார்க்காமல் விமர்சித்ததன் மூலம் பிரதமர் நாற்காலிக்கு அவர் குறிவைத்ததாக கூறப்பட்டது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை

இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், 2 முறை இந்திய பிரதமராகவும் இருந்த மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரும் அப்போது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கிறது.

 மக்களவையில் தகுதிநீக்கம்

மக்களவையில் தகுதிநீக்கம்

இந்த நிலையில், மன்மோகன் சிங் அரசு 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி எதிர்க்காமல் அது தற்போது நடைமுறையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி மக்களவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார். பிரதமர் நாற்காலிக்கு குறித்து வைத்து ராகுல் காந்தி முன்னெடுத்த நகர்வு தற்போது அவரது எம்பி பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+