அமேதி மக்கள் என் குடும்பம்.. என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.. ராகுல் காந்தி உருக்கம்
டெல்லி: அமேதி மக்கள் என் குடும்பம். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என ராகுல் காந்தி உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.
அமேதியில் நாளை மறுதினம் அதாவது மே 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தந்தை ராஜீவ்காந்தியின் தொகுதியான அமேதியில் 4-ஆவது முறையாக ராகுல் போட்டியிடுகிறார்.

அமேதி என் குடும்பம்
இந்த நிலையில் அமேதி என் குடும்பம் என்ற தலைப்பில் அந்த தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் அமேதி தொகுதி மக்கள் அனைவரும் எனது குடும்பம்.

ஒன்றுப்படுத்தும் முயற்சி
வரும் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். அமேதி மக்கள் கொடுத்த அன்பின் காரணமாக நாட்டின் அனைத்து திசைகளையும் ஒன்றுபடுத்த முயல்கிறேன்.

தடுத்த பாஜக
உண்மை, நேர்மை, எளிமை ஆகியவற்றில் அமேதி வாக்காளர்களின் பலம் அடங்கியிருக்கிறது. அந்த மக்கள் அளித்த துணிச்சலால்தான் நான் உண்மையை பின்பற்றி வருகிறேன். காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பாஜகவால் தடுக்கப்பட்ட திட்டங்களை தொடங்குவேன்.

பாஜக ஆட்சி
விவசாயி, இளைஞர்கள், நலிவடைந்தோர், பெண்கள், சிறிய வர்த்தகர்களுக்கு காங்கிரஸ் கட்சி வேலை செய்கிறது. ஆனால் பாஜகவோ தொழிலதிபர்களுக்கு வேலை செய்கிறது என்று தனது கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications