ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் திடீர் இன்ஜின் கோளாறு.. உள்ளே நடந்தது என்ன.. வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது விமானம்.

4ம் கட்ட லோக்சபா தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை டெல்லியிலிருந்து பாட்னா செல்ல அவர் வழக்கமாக பயன்படுத்தும் தனியார் விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால் செல்லும் வழியில் திடீரென விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Rahul Gandhi plane gets with engine trouble

இதையடுத்து உடனடியாக டெல்லி விமான நிலையத்திற்கே விமானம் திரும்பி வந்து தரையிறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனிடையே, விமானத்திற்குள் நடைபெற்ற சம்பவங்களை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ஷேர் செய்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இப்படித்தான் ராகுல் காந்தி பயணித்த விமானம், இயந்திர கோளாறுக்கு உள்ளானது. இப்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+