ராகுல் காந்தி, பிரணிதி ஷிண்டேவை மணக்கிறார்? சீக்கிரம் கல்யாணம்.. தீயாய் பரவும் தகவல்கள்
டெல்லி: ராகுல் காந்தியின் கல்யாண பேச்சு கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்துவிட்டது. எங்கு சென்றாலும் அவரது திருமணம் குறித்தே அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரணிதி ஷிண்டேவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இப்போது வயது 54. இப்போது எங்குச் சென்றாலும் எப்போது திருமணம் என்ற கேள்வி தான் அவரிடம் தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி: தமிழ்நாடு தொடங்கிப் பல இடங்களில் அவரிடம் பலர் பல விதங்களில் கேட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு பதிலை அளித்துள்ளார். "சரியான பெண்ணை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்வேன்.." "நான் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன்.." "கட்சி வேலை அதிகமாக இருக்கிறது" என்று ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு பதிலை அளித்து வந்துள்ளார்.
இருப்பினும், லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவர் ரேபரேலி தொகுதியில் பேசும் போது விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியிருந்தார். இது அப்போதே டிரெண்ட் ஆனது.
Speculations regarding marriage of Rahul Gandhi and Praniti Shinde are increasing day by day.
— Harsh Tiwari (@harsht2024) September 8, 2024
Two journalists are discussing this on a YouTube channel.
I don't know the truth but now these rumors are gaining momentum. pic.twitter.com/RY3HGoayp3
இதற்கிடையே பிரணிதி ஷிண்டே என்பவரை ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் இப்போது தகவல் பரவி வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த பிரணிதி ஷிண்டேவும் காங்கிரஸில் தான் இருக்கிறார்.

யூடியூப்பில் பல்வேறு சேனல்களும் கூட இது குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ட்விட்டர் தளத்திலும் கூட ராகுல் காந்தி ப்ரணிதி ஷிண்டேவை திருமணம் செய்து கொள்வதாக தகவல் பரவி வருகிறது.. இந்த திருமணம் மகாராஷ்டிராவில் ஒரு பெரிய அரசியல் கூட்டணிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Rumor has it that a major political alliance is on the horizon, as whispers suggest that Rahul Gandhi is set to marry Praniti Shinde, the daughter of Susheel Kumar Shinde. If true, this could mark one of the biggest political unions in recent history.#RahulGandhi pic.twitter.com/8bMzdBjPpF
— दुनियांदारी (@VVipinpatel) August 21, 2024
அதேநேரம் தற்போது வரை இது வெறும் தகவல்களாக மற்றும் வதந்திகளாக மட்டுமே இருக்கிறது. இது குறித்து இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ள நிலையில், பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் எம்.பி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.















Click it and Unblock the Notifications