டெல்லி: அதானி குறித்து இனி பேசுவதை தடுக்கவே தகுதி நீக்கம் செய்துள்ளார்கள் என ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வதற்காக வரும் 30 ஆம் தேதி வரை அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியின் எம்பி பதவி தொடர்பாக மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியது. எம்பிக்கள் அல்லது எம்எல்ஏக்கள் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பதவியை இழப்பார்கள் என சட்டம் வகுக்கப்பட்டதாக கூறினர்.
இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
Mar 25, 2023, 1:35 pm IST
அதானி குறித்து பேசினாலே பிரதமர் பயப்படுகிறார்- ராகுல்
Mar 25, 2023, 1:35 pm IST
அப்படியென்றால் நீங்கள்தான் அதானியா என நான் கேட்கிறேன்- ராகுல்
Mar 25, 2023, 1:35 pm IST
அதானி ஒரு ஊழல் நபர் என்பது மக்களுக்கு தெரியும்- ராகுல்
Mar 25, 2023, 1:34 pm IST
ஊழல் செய்த அதானியை பிரதமர் மோடி காப்பாற்றுவது ஏன்- ராகுல் கேள்வி
Mar 25, 2023, 1:30 pm IST
இங்கிலாந்தில் நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்- ராகுல்
Mar 25, 2023, 1:30 pm IST
மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை- ராகுல்
Mar 25, 2023, 1:29 pm IST
ரூ 20 ஆயிரம் கோடி விவகாரத்தை பாஜக திசை திருப்புகிறது- ராகுல் காந்தி
Mar 25, 2023, 1:29 pm IST
அதானி குழும முதலீடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்பாதது ஏன்- ராகுல்
Mar 25, 2023, 1:26 pm IST
அதானியால் ரூ 20 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை புரட்ட முடியாது - ராகுல்
Mar 25, 2023, 1:26 pm IST
அப்படியிருக்கையில் அதானி நிறுவனங்களில் ரூ 20 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது யார்- ராகுல்
Mar 25, 2023, 1:25 pm IST
என்னை நிரந்தரமாக எம்பி பதவியிலிருந்து நீக்கினாலும் நான் என் பணியை தொடர்வேன்- ராகுல்
Mar 25, 2023, 1:25 pm IST
நான் நாடாளுமன்றத்தில் இருந்துதான் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்றில்லை- ராகுல்
Mar 25, 2023, 1:25 pm IST
நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் என்னால் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும்- ராகுல்
Mar 25, 2023, 1:23 pm IST
நான் அதானி குறித்து பேசும் போது பிரதமரின் கண்களில் பயம் தெரிந்தது- ராகுல்
Mar 25, 2023, 1:23 pm IST
நான் பிரதமரின் கண்களை பார்த்தேன்- ராகுல்
Mar 25, 2023, 1:23 pm IST
ஜனநாயகத்திற்கான எனது குரலை யாரும் ஒடுக்க முடியாது- ராகுல்
Mar 25, 2023, 1:22 pm IST
நான் இந்தியாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பேசவில்லை- ராகுல்
Mar 25, 2023, 1:19 pm IST
அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ 20 ஆயிரம் கோடி சென்றுள்ளது- ராகுல்
Mar 25, 2023, 1:19 pm IST
ரூ 20 ஆயிரம் கோடி யாருடைய பணம் என நான் கேள்வி கேட்டேன் அதற்கு பதில் இல்லை- ராகுல்
Mar 25, 2023, 1:18 pm IST
நான் அடுத்ததாக அதானி குறித்து பேசிவிடுவேன் என பிரதமர் அஞ்சுகிறார்- ராகுல்
Mar 25, 2023, 1:18 pm IST
நான் இனி கேள்வி கேட்க கூடாது என என்னை தகுதிநீக்கம் செய்துள்ளார்- ராகுல்
Mar 25, 2023, 1:18 pm IST
அதானிக்கும்- மோடிக்கும் இடையே உள்ள உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்- ராகுல்
Mar 25, 2023, 1:18 pm IST
இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்கவே போராடுகிறேன்- ராகுல்
Mar 25, 2023, 1:17 pm IST
என்னை சிறையில் அடைத்தாலும் நான் பயப்பட மாட்டேன்- ராகுல்
Mar 25, 2023, 1:17 pm IST
எனது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து அச்சுறுத்தினாலும் அஞ்ச மாட்டேன்- ராகுல்
Mar 25, 2023, 1:14 pm IST
வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டு- ராகுல்
Mar 25, 2023, 1:13 pm IST
ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை- ராகுல்
Mar 25, 2023, 1:13 pm IST
கேள்வி கேட்பதை நான் நிறுத்த மாட்டேன்- ராகுல்
Mar 25, 2023, 1:13 pm IST
எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன்
Mar 25, 2023, 1:12 pm IST
அதானி குழுமத்தில் சில முதலீடுகளில் சீனாவுக்கும் தொடர்பு- ராகுல்
READ MORE
1:03 PM, 25 Mar
எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்
1:04 PM, 25 Mar
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானிக்கும் என்ன சம்பந்தம் என நாடாளுமன்றத்தில் கேட்டேன்- ராகுல்
1:04 PM, 25 Mar
ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக நான் ஏற்கெனவே நிறைய முறை சொல்லியிருக்கிறேன்- ராகுல்
I have said many times before that democracy is being attacked in the country. We are seeing examples of this each day. I asked questions in the Parliament regarding the relationship between PM Modi and Adani: Congress leader Rahul Gandhi pic.twitter.com/qUTdW4K4Rf
Rahul Gandhi Press Conference Today (ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு) LIVE News in Tamil: Check Out the LIVE News Updates on Congress leader Rahul Gandhi press conference today after being disqualified from the Lok Sabha.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.