Rahul Gandhi: லண்டனில் தோழியுடன் உணவு விடுதிக்கு சென்றேன்.. அங்கே என்ன நடந்தது தெரியுமா? ராகுல் பகிர்ந்த சீக்ரெட்
டெல்லி: தாயார் சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தனது இளமை காலத்தில் நடைபெற்ற சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்தார். தனது பெண் தோழியை, பெற்றோர் முதன் முதலாக சந்தித்த கேம்ப்ரிட்ஜ் ரெஸ்ட்ராண்ட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு அடுத்து என்ன நடந்தது என்பது பற்றியும் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தியின் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துவிட்டு அவர் அடித்த பஞ்ச் அங்கு இருந்த அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.

தோழியுடன் உணவு விடுதிக்கு சென்றேன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் கூட்டாக புத்தகத்தை வெளியிட்டனர். பின்னர் நிகழ்ச்சியில் சோனியா பேசினார். அதேபோல ராகுல் காந்தியும் உரையாற்றினார்.
ராகுல் காந்தி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக தனது கல்லுரி காலங்களில் லண்டனின் கேம்ப்ரிட்ஜ்ஜில் உள்ள உணவு விடுதி ஒன்றிற்கு பெண் தோழியை அழைத்து சென்றதாக பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-
இப்போதும் நியாபகம் இருக்கிறது
எனது தந்தை ராஜீவ் காந்தியும் தாயார் சோனியாவும் முதன் முதலாக கேம்ப்ரிட்ஜ்ஜில் உள்ள ரெஸ்ட்ராண்டில் தான் சந்தித்தனர் என்பது எனக்கு தெரியவந்தது. இது பற்றி எனக்கு தெரிந்த சில ஆண்டுகள் கழித்து அதே ரெஸ்ட்ராண்டிற்கு எனது பெண் தோழியை நான் அழைத்து சென்றேன். எனது பெண் தோழியிடம் அந்த உணவு விடுதியை தெரியுமா என்றேன்.
அவருக்கு அதை பற்றி எதுவும் தெரியவில்லை. உடனே நான், அந்த உணவு Varsity Restaurant- க்கு செல்வோம் என்று கூறினேன். அங்கே சென்ற போது எனது பெற்றோர் சந்தித்த இடத்தை பார்க்க விரும்பினேன். உள்ளே சென்ற போது, அங்கு மஞ்சள் நிறத்தில் ஒரு கதவு இருந்தது. எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது. அங்கு நின்று கொண்டிருந்த நபர், எத்தனை பேர் என்று கேட்டார்.
நான் இருவர் என்று சொன்னதும், அங்கே போய் உட்காருங்கள் என்றார். டேபிளில் அமர்ந்ததும், அந்த நபரிடம் எனது பெற்றோர்கள் இந்த உணவு விடுதியில்தான் சந்தித்துகொண்டார்கள் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டேன். உடனே என்னை உற்றுப்பார்த்த அவர், ஓ அவர்களா? எனக்கு நன்றாக தெரியும் என்றார். அவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டேன்.
குலுங்க குலுங்க சிரிக்க
யாரை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அதன்பிறகு எங்கள் உரையாடல் உணவு மெனு பக்கம் திரும்பியது. இங்கே என்ன உணவு நன்றாக இருக்கும் என்று நான் கேட்டேன். அவர் உடனே சிக்கன் சாசர் சாப்பிட பரிந்துரைத்தார். ஆனால் அந்த உணவு அவ்வளவு நன்றாக இல்லை. எனவே நான் சொல்வதை கேளுங்கள்.
காதலில் விழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால், அந்த உணவு விடுதிக்கு செல்லுங்கள். ஆனால் ஒருபோதும் சிக்கன் சாசர் சாப்பிட்டு விடாதீர்கள்" என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சால் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவருமே பலமாக சிரித்தனர்.
பெண் தோழி எங்கே இருக்கிறார்?
நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள், பெண் தோழி எங்கே இருக்கிறார் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, அவர் என்னுடைய தோழி என்று சொல்லிவிட்டு சென்றார். ராகுல் காந்தி தனது முதுகலை பட்டத்தை லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
1995 ஆம் ஆண்டு கால கட்டத்தில் லண்டனில் பயின்ற ராகுல் காந்தி, படித்து முடித்த பிறகு சில காலம் லண்டனில் உள்ள மேனேஜ்மேண்ட் கன்சல்ட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றவும் செய்தார். ராகுல் காந்தி தனது இளங்கலை பட்டத்தை அமெரிக்காவில் முடித்தார்.





Click it and Unblock the Notifications
