குடியரசு தினவிழாவில் ராகுலுக்கு அவமதிப்பா? காங்கிரஸ் கொந்தளிப்பு.. விதிகள் சொல்வது என்ன?
டெல்லி: குடியரசு தின விழா நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மரபுகளை மீறி மத்திய பாஜக அரசு செயல்படுவதாக காங்கிரஸ் சாடியுள்ள நிலையில், பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
நாட்டின் 77 வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசுதினவிழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

வேண்டும் என்றே செய்த செயல்
விதிகளை மீறி மத்திய அரசு செயல்படுவதாகவும் 2014 ஆம் ஆண்டு அத்வானி உள்ளிட்டோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட படத்தை வெளியிட்டு, மத்திய அரசை சாடியுள்ளது காங்கிரஸ். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன் தீன் சிங் சுர்ஜேவலா தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை இப்படி நடத்துவது கண்ணியம், மரபு மற்றும் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளதா? தாழ்வு மனப்பான்மையில் உள்ள அரசின் விரக்தியை காட்டும் வகையில்தான் இது அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், மத்திய பாஜக அரசு வேண்டும் என்றே செய்த செயல் இது..
ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் இப்படி செயல்பட்டு இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு எல்.கே அத்வானி முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டு இருக்கும் படத்தை பகிர்ந்துள்ள எம்.பி, அத்வானி எங்கே அமர வைக்கப்பட்டு இருக்கிறார் என்று பாருங்கள்.
ஏன் இந்த குளறுபடி?
நெறிமுறையில் ஏன் இந்த குளறுபடி? ராகுல் காந்தியையும் கார்கேவையும் அவமானப்படுத்த மோடியும் அமித்ஷாவும் விரும்புவதால் இது நடக்கிறதா? 2014-ல் எல்.கே. அத்வானி ராஜ்யசபாவிலோ அல்லது மக்களவையிலோ எதிர்க்கட்சித் தலைவராக கூட இருக்கவில்லை. சுஷ்மா சுவராஜ்தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக அப்போது இருந்தார்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. குடியரசு தின விழாவில் இருக்கை ஒதுக்கீடு, ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின்படி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
எதிர்க்கட்சி தலைவர் அரசின் உயர் பதவிகளின் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளார். அதாவது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், துணை பிரதமர், தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், முதல்வர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அடுத்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் வருகிறார். இதற்கிடையே, இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக பதிலடி
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பந்தாரி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- மூன்றாவது இருக்கையில் அமர்ந்து இருப்பதை பற்றி ராகுல் காந்தி கவலைப்படவில்லை. கடமை பாதையில் பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பதை நாடு கொண்டாடி கொண்டு இருக்கும் போது, ராகுல் காந்தி தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்ததை திசைதிருப்ப முயல்கிறார்" என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, பாஜக அமித்மாளவியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் அமைப்பை காப்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் காந்தி மற்றும் கார்கே, குடியரசு தின விழாவில் கடந்த காலங்களில் பங்கேற்காமலும் இருந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே











Click it and Unblock the Notifications