பிளாக் பெல்ட் ராகுல் காந்தி! கையை மடக்கி கொடுத்த அடியை பாருங்க! என்ன ஒரு ஸ்டைல்- டிரெண்டாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் சில சிறுவர்களுடன் சேர்ந்து தற்காப்புக் கலை பயிற்சிகளை மேற்கொள்கிறார். மேலும், அவர்களுக்கு ஜியு ஜிட்சு கலையைச் சொல்லியும் தருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

நமது நாட்டில் இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுக்க பள்ளி, கல்லூரிகளில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

rahul gandhi congress

இதற்கிடையே தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தற்காப்புக் கலை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தி: பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர் சிலருடன் சேர்ந்து தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும், "பாரத் டோஜோ யாத்திரை" விரைவில் வரும் என்றும் அவர் ஜாலியாக பதிவிட்டுள்ளார். டோஜோ என்பது தற்காப்புக் கலை பயிற்சி செய்யும் பள்ளியைக் குறிக்கும் வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​தினமும் மாலை ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு எளிய வழியாகத் தொடங்கிய இந்த செயல், விரைவில் அனைவரும் விரும்பி செய்யும் கம்யூனிட்டி செயலாக மாறிவிட்டது. எங்களுடன் யாத்திரை வந்தவர்கள், நாங்கள் தங்கிய ஊர்களில் இருந்த இளம் தற்காப்புக் கலை மாணவர்கள் இதில் பங்கேற்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை சுமார் 2 மாதங்கள் மேற்கொண்டார். முன்னதாக கடந்த 2022 செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் நீட்சியாகவே இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை இருந்தது.

ராகுல் காந்தி இன்று சுமார் 8 நிமிடங்கள் ஓடும் தற்காப்புக் கலை வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலை குறித்த பல்வேறு நுட்பங்களைக் கற்பிக்கிறார். மேலும், அவர் அகிடோ என்ற தற்காப்புக் கலையில் கருப்பு பெல்ட் என்றும் ஜியு-ஜிட்சுவில் நீல பெல்ட் வாங்கி இருப்பதாக அந்த வீடியோவில் கூறுகிறார். இந்த வீடியோவில் அவர் பல வித பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராகுல் காந்தி: ராகுல் காந்தி மேலும் தனது ட்விட்டரில், "தியானம், ஜியு-ஜிட்சு, அகிடோ உள்ளிட்ட 'ஜென்டில் ஆர்ட்களை (Gentle Art) அழகை இந்த இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. வன்முறை சிந்தனையை மாற்றுவதே எங்களின் நோக்கம்.. மிகவும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கத் தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குவோம்.

இந்த தேசிய விளையாட்டு தினத்தில், எங்களின் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. இது உங்களில் சிலரை இந்த ஜென்டில் ஆர்ட்களை கற்க வைக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+