ராகுல் காந்திக்கு சர்ருன்னு எகிறுது ஆதரவு.. எதிர்க்கட்சிகளை வழிநடத்த சரியான ஆள்.. சர்வே ரிசல்ட்!
டெல்லி: மோடி அரசை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் மிகவும் பொருத்தமானவர் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Mood of the Nation' என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் India Today - சி வோட்டர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை முந்தையதுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது.

இந்தியா டுடே- சிவோட்டர் நடத்திய மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) கருத்துக் கணிப்பு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 14, 2025 வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் 54,788 நபர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. சி வோட்டரின் வழக்கமான டேட்டாவில் இருந்து கூடுதலாக 1,52,038 நேர்காணல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த MOTN கருத்துக்கணிப்பில் மொத்தம் 2,06,826 பேர் பங்கேற்றனர்.
பாஜக - காங்கிரஸ்
2025பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக தனித்து 281 இடங்களைப் பிடிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் 184, காங்கிரஸ் 78 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 260 இடங்களும் எதிர்க்கட்சிகளுக்கு 186 இடங்களும் காங்கிரஸுக்கு 97 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி செயல்பாடுகள்
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 62% பேர் தெரிவித்திருந்தனர். மோடியின் செயல்பாடுகள் மோசம் என 21% பேர் தெரிவித்திருந்தனர். தற்போதைய ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் சிறப்பு என 58% பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். மோடி அரசு செயல்பாடு மோசம் என 26% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ராகுல் காந்தி
மோடி அரசை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை வழிநடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பொருத்தமானவர் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரும் மக்களின் விருப்பங்களில் இருந்தனர், ஆனால் எதிர்க்கட்சியை வழிநடத்துவதில் ராகுல் காந்திக்கே அதிக ஆதரவு இருந்துள்ளது.
ராகுல் காந்தி வலிமை
பிப்ரவரியில் நடத்தப்பட்ட முந்தைய MOTN கணக்கெடுப்பில் ராகுல் காந்திக்கு 23.9 சதவீதமாக இருந்த இந்த ஆதரவு, தற்போது 28.2% ஆக அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொறுப்பை வழிநடத்த மிகவும் பொருத்தமான தலைவராக ராகுல் காந்தி இருப்பார் என முன்பை விட அதிகமானோர் நம்புவதாக இந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 7.7 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் 6.7 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 6.4 சதவீத வாக்குகளுடன் மற்றும் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி 4.4 சதவீதம் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் செயல்திறன் மீதும் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை அதிசிறப்பு என்று மதிப்பிட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திலிருந்து இப்போது 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோசமாக உள்ளதாக இருந்த மதிப்பீடு 27 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications