ஹலோ பாஜக.. கோமியம் குடிச்சிட்டு ரெடியா இருங்க, நான் வர்றேன்.. போட்டு தாக்கிய பெண் எம்பி..!

பாஜகவை கிண்டலடித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் இன்னைக்கு லோக்சபாவில் பேச போறேன்.. மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் கிண்டல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

"மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா" என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாஜக எந்த காலத்திலும், வாழ்நாளில் தமிழகத்தை ஆளவே முடியாது என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி கூறியிருக்கிறார்... இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்... இக்கருத்தை கூறியதற்காக முதல்வர் ஸ்டாலினும் வரவேற்று கருத்து கூறியிருந்தார்.. ஆனால், பாஜக தலைவர்கள் அத்தனை பேரும் ராகுல் மீது பாய்ந்தனர்..

 கோமியம் ட்வீட்

கோமியம் ட்வீட்

கண்டித்தும் விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. ராகுலுக்கு எதிராக கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பக்கமும், பாஜக மறுபக்கமும் மாறி மாறி பதிலளித்தும் காட்டமாக விமர்சித்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பாஜகவை அட்டாக் செய்து பேசியிருப்பது பரபரப்பை கூட்டியிருக்கிறது.. அவர் ஒரு பெண் பெண் எம்பி.. பெயர் மஹுவா மொய்த்ரா...

பாஜக

பாஜக

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தான் பாஜகவினருக்கு எதிராக ஒரு சவாலை விடுத்து இருக்கிறார்.. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "நான் மக்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின்போது பேசுகிறேன்... நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், பாஜகவினர் கற்பனை கதைகளை கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.. வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள் " என்று பதிவிட்டுள்ளார்..

கோமியம்

கோமியம்

அதுமட்டுமல்ல, மஹுவா மொய்த்ரா இந்த ட்வீட்டர் பதிவு மூலம் பிரதமர் மோடியை தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்போவதாக தெளிவான அறிகுறிகளையும் பதிவிட்டுள்ளார்... ஏற்கனவே ராகுலால் டென்ஷனில் இருக்கும் பாஜகவினர், பெண் எம்பி போட்ட கோமியம் ட்வீட்டால், மேலும் கொந்தளித்துள்ளனர்.. அவருக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+