13 மாநிலங்கள் 6,700 கி.மீ.. மணிப்பூர் டூ மும்பை.."பாரத் நியாய யாத்திரை".. தொடங்குகிறார் ராகுல் காந்தி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை மணிப்பூரிலிருந்து தொடங்குகிறார். இதற்கு 'பாரத் நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.
மணிப்பூர் மாநிலத்திலிருந்து யாத்திரை தொடங்கப்படுகிறது. மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த யாத்திரை இன்று மணிப்பூரில் தொடங்கி 67 நாட்கள் பயணத்திற்கு பிறகு மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி இன்று ஒரு நாள் மட்டும் மணிப்பூரில் யாத்திரையை மேற்கொள்ளும் அவர், அடுத்த நாள் நாகலாந்து செல்கிறார். அங்கு 5 மாவட்டங்கள் 257 கி.மீ என 2 நாட்கள் பயணம் செய்கிறார். இதனையடுத்து, அசாமில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும், அருணாச்சலப் பிரதேசம், மேகலாயாவில் தலா ஒரு நாள், மேற்கு வங்கத்தில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 523 கி.மீ தொலைவும், பீகாரில் 4 நாட்களில் 7 மாவட்டங்களில் 425 கி.மீ தூரம், ஜார்கண்டில் 8 நாட்களில் 13 மாவட்டங்களில் 804 கி.மீ என பயணம் மேற்கொள்கிறார்.
மேலும், ஒடிசாவில் 4 நாட்களில் 4 மாவட்டங்களில் 341 கி.மீ, சத்தீஷ்கரில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 536 கி.மீ, உத்தர பிரதேசத்தில் 11 நாட்களில் 20 மாவட்டங்களில் 1,074 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 7 நாட்களில் 9 மாவட்டங்களில் 698 கி.மீ, குஜராத்தில் 5 நாட்கள் 445 கி.மீ, மகாராஷ்டிராவில் 5 நாட்கள் 479 கி.மீ பயணம் மேற்கொண்டு இறுதியாக மார்ச் 21ம் தேதி மும்பையில் பயணத்தை முடிக்கிறார். ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பிஸியாக உள்ள மத்திய அரசு, மக்களை கண்டுக்கொள்ளவில்லை என இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications