மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி அங்கு போலீசாரால் தடுத்து நிறுத்தம்.. காங்கிரஸ் கடும் கண்டனம்
டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் இம்பாலில் ராகுல் காந்தி பொதுமக்களை சந்திக்க அங்கு ஆளும் பாஜக அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கிடு விவகாரத்தால் கடந்த இரண்டு மாதங்களாக இரு பிரிவினரிடையே வன்முறை வெடித்தது. கடுமையான வன்முறை காரணமாக மணிப்பூர் மாநிலமே வன்முறை களமாக மாறி உள்ளது. அமைதி நடவடிக்கை மேற்கொள்ள ராணுவம் அங்கு குவிக்கப்படுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கள ஆய்வு செய்தார். அதன்பிறகே அங்கு படைகள் குவிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தீவிரமான ரோந்து பணியில் இறங்கி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இன்று மதியம் சென்றடைந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவிக்க முயன்றார். ஆனால் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ராகுல் காந்தி பொது மக்களை சந்திக்க போலீசார் தடை விதித்தனர். பிஷ்னுபூர் பகுதியில் ராகுல் காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சிகள் பாஜகவை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜகவின் அணுகுமுறை காரணமாக மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கார்கே கூறும் போது, மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் முதல்வர் பிரேன்சிங் மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது. பிரதமர் இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருகிறார். பிரேன் சிங் தலைமையிலான அரசை அகற்றாதவரை மாநிலத்தில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை எனவே பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்ற எதிர்க்கட்சிகளும் பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications